செய்தி:
தேர்தல் வந்தால் தமிழ்நாடு நினைவுக்கு வரும்; பட்ஜெட் நேரத்தில் மறந்து போகும்!
- பாஜக மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு.
கோவிந்த் கமெண்ட்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது சரியான கருத்துதான். பலருக்கும், பல கட்சிகளுக்கும் தேர்தல் வந்தால் வாக்களப் பெருமக்கள் நினைவுக்கு வருகிறார்கள். அவர்களுடைய தேவைகள் நினைவுக்கு வருகின்றன.
முதலமைச்சர் சொன்ன இந்தக் குற்றச்சாட்டு பாஜகவுக்கு மட்டுமல்ல, இங்குள்ள எல்லாக் கட்சிகளுக்குமே ஒரு விதத்தில் பொருந்தும்.