நாம் தமிழர் கட்சி வாக்குகள் குறைய காரணம் என்ன?

செய்தி:

234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 4-வது இடமே கிடைத்தது. கடந்த தேர்தலை விட வாக்குச் சதவீதமும் குறைவு.

கோவிந்த் கமெண்ட்:

விஜய் தவெக கட்சி ஆரம்பித்த போதிலிருந்தே, நாம் தமிழர் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு நெருக்கமாகத்தான் தன்னை காட்டிக் கொண்டிருந்தார். சீமானும் விஜய் தன் தம்பி என்று அப்போது பேசி வந்தார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஒரு கட்டத்தில் விஜய்க்கு எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைக்கிறவராக சீமான் தொடர்ந்து இருந்து வந்தார்.

இந்தநிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் விஜய், சீமானின் வாக்குகளைப் பிரிப்பார் என்றே பலர் கருத்து கூறி வந்தனர்.

அதை மெய்ப்பிப்பதைப் போல, சென்ற தேர்தலில், 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச் சதவீதத்தைப் பெற்றிருந்த சீமான், இந்த முறை பாதிக்கு மேல் கீழிறங்கி, தற்போது, தான் புகார் சொல்லிய அதே விஜய்க்கு வாழ்த்து சொல்லும் நிலையில் இருக்கிறார்.

Comments (0)
Add Comment