செய்தி:
போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர் குடியிருக்க வேண்டும்!
– கண்டிஷன் போட்ட மக்கள் விழிப்புணர்வு சங்கம்.
கோவிந்த் கமெண்ட்:
மக்கள் விழிப்புணர்வு சங்கம் போட்டிருக்கிற கண்டிஷனை எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
உதாரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில்தான் குடியிருக்கிறாரா? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் தான் கூடியிருக்கிறாரா?
தவெக தலைவரான விஜய் பெரம்பூர் தொகுதியில் தான் கூடியிருக்கிறாரா? அல்லது திருச்சி கிழக்கு தொகுதியில் குடியிருக்கிறாரா?
அதேபோல், சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் அதே தொகுதியில் தான் குடியிருக்கிறாரா?