அப்பா அருகில் போய் நின்ற ஜெயகாந்தன், “என்ன லா.ச.ரா. எப்படி இருக்கீங்க?”
“ஜெயகாந்தனா… என்னப்பா அடையாளமே தெரியாம தாடியும் மீசையுமா… அது இருக்கட்டும்… ஞானபீடம் வாங்கிட்டையே… ரொம்ப சந்தோஷமாயிருக்கு”
வாஞ்சையான அடக்கத்துடன், “ஐயாவுக்குக் கிடைக்க வேண்டியது. எனக்குக் கிடைச்சிருக்கு.”
“கிடைச்சது உனக்கா எனக்காங்கறது பேச்சு இல்லை. தமிழுக்கு முப்பதிரெண்டு வருஷமா கிடைக்கலாங்கறவா வாயை அடைச்சாச்சு. அதுதான் இங்க முக்கியம்.”
– லா.ச.ரா வின் மகன் சப்தரிஷி சொன்னவற்றிலிருந்து…