வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை வரிகள்!

வாசிப்பின் ருசி:

குழம்பு வைக்க காசில்லாத
நாட்களில்
உண்ண முகம்

சுழித்த என்னிடம்

நாமும் நல்லாயிருப்போம்டா

என்ற சொற்களை சோற்றில்
ஊற்றி ஊட்டி வளர்த்தாள்
என் தாய்.

– இயக்குநர் சீனு ராமசாமி

Comments (0)
Add Comment