ஜெமினி ஸ்டுடியோஸ்: சென்னையின் பொக்கிஷம்!

மோஷன் பிக்சர்ஸ் பிரடியூசர்ஸ் கம்பைன்ஸ் என்கிற ஸ்டுடியோவை 1940ஆம் ஆண்டு இயக்குநர் கே. சுப்ரமண்யத்திடமிருந்து எண்பத்து ஆறாயிரத்து நானூற்றி இருபத்தேழு ரூபாய், பதினோரு அணா, ஒன்பது காசுகளுக்கு வாங்கி, ஜெமினி ஸ்டுடியோஸ் எனப் பெயரிட்டார் எஸ்.எஸ். வாசன்.

அன்றைய மவுண்ட் ரோட்டின் அடையாளங்களில் ஒன்றாகவும் இந்திய சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்கியது ஜெமினி; ஜெமினியின் இரட்டை குழந்தைகள் (Gemini Twins) இலச்சினை புகழ்பெற்றது.

மவுண்ட் ரோடு அண்ணா சாலையாகி ஆண்டுகள் ஐம்பது கடந்தாலும் அதன் மேம்பாலம் இன்றுவரை பலருக்கு அது ஜெமினிதான்!

தகவல்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

Comments (0)
Add Comment