சினிமாவைக் கலக்கிய நாட்டுப்புற‌ப் பாட்டிகள்!

எத்தனையோ தமிழ் சினிமாக்கள் வெற்றி அடைந்துள்ளன. வெற்றி அடைந்த படங்களையும் தமிழ் சினிமாவின் இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், வசன கர்த்தாக்கள், பின்னணி பாடகர்கள், இசைஅமைப்பாளர்கள், நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்கள், எடிட்டிங் என பலரது விடாமுயற்சியே இந்த வெற்றிக்கான காரணம்.

சில படங்களின் வெற்றிக்கு அதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் முக்கிய காரணமாகவும் இருந்துக்கிறது. அதில் நாட்டுப்புற பாடல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

இதுபோன்று திரைப்படங்களில் இடம்பெற்றிருந்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய சில நாட்டுப்புற‌ப் பாட்டிகள் பற்றிய தொகுப்பு.

கொல்லங்குடி கருப்பாயி

இவர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி எனும் ஊரைச் சேர்ந்தவர். நாட்டுப்புறப் பாடல்களில் கைதேர்ந்தவர்.

நன்றாக நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். இவ்வளவு திறமையுள்ள ஒரு நடிகையை பாண்டியராஜனைத்தவிர எந்த இயக்குனரும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை.

இவர் இயக்கிய ஆண்பாவம் படத்தில் பாட்டிக்கு நல்லதொரு நகைச்சுவை கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார். தொடர்ந்து இவரின் ஏட்டிக்கு போட்டி, கோபாலா கோபாலா உட்பட பாண்டியராஜனின் பல படங்களில் நடித்து நடிப்புக்கு பெருமைசேர்த்தவர்.

பறவை முனியம்மா

இவரது பல பாடல்களை நான் எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில் இவரது கச்சேரிகளில் கேட்டிருக்கிறேன். 2003-ம் ஆண்டு வந்த தரணி இயக்கிய தூள் படத்தின் மூலம் இவர் சினிமாவுக்கு வந்தார் படம் முழுக்க இவர் இருந்தாலும்.

க்ளைமாக்ஸில் இவர் பாடிய “சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி” என்ற பாடலே படத்திற்கு மிக மிக வலு சேர்த்தது. அந்த பாடலில் விக்ரமின் ஆக்ஷன் காட்சிகளும் சேர்ந்து படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தன‌.

தொடர்ந்து விவேக் நடித்த காதல் சடுகுடு, சரத்குமார் நடித்த ஏய் உட்பட பல படங்களில் நடித்து இன்றுவரை வெற்றிகரமான சினிமா பாட்டியாக வலம் வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பறவை எனும் கிராமமாகும்.

தேனி குஞ்சரம்மா

இவர் தேனியைச் சேர்ந்தவர் பாரதிராஜாவின் பல படங்களில் பார்த்திருக்கலாம். சமீபத்தில் மறைந்துவிட்டார்.

சிறந்த நாட்டுப்புற பாடகி ரஹ்மான் இசையமைத்த “கொக்கு சைவ கொக்கு“ என்ற பாடலையும் காதலன் படத்தின் “சைதாப்பேட்டை ராணிப்பேட்டை“ பாடலையும் பாடியுள்ளார்.

குறிப்பாக கருத்தம்மா படத்தில் கள்ளிப்பால் கொடுக்கும் கிழவியாக வந்து அனைவரையும் கவர்ந்தார்.

  • நன்றி – ரிவர்ஸ் தமிழ் 
 
Comments (0)
Add Comment