நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல…!

நூல் அறிமுகம்:
 
நாவல் என்பது இதிகாசத்தின் சகோதரன். நாவலின் வழியாகக் காலம் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
 
நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல அதன் வழியே காலகட்டத்தையும், மக்களின் வாழ்க்கை, பண்பாடு என அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடியது.
 
நாவல் வாசிப்பது என்பது எதோ கற்பனைக் கதையை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதுபோக்கு அல்ல. நாவலின் மூலமாக எழுத்தாளர் நமக்கு பல அனுபவங்களை நம்மால் காண முடியாத வாழ்க்கையை நமக்கு காண்பிக்கிறார்.
 
மனிதர்களைப் புரிந்து கொள்ள நாவல்களும் சிறுகதைகளும் தான் நமக்கு உதவுகின்றன. இன்றைய கல்வி என்பது பொருளாதாரத்தை மையமிட்ட ஒன்றாக மாறிவிட்டது. படிப்பும் அதற்கேற்றார்போல வடிவமைக்கப்பட்டு விட்டது.
 
எத்தனை பெரிய வேலையில் இருந்தாலும் சக மனிதர்களோடும் பிராணிகளோடும் தான் பழக வேண்டும்.
 
அவர்களிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் (மன மற்றும் குண ரீதியாக) அல்லது எவ்வாறு மனிதர்கள் நடக்கிறார்கள் என்பதை நாவல்கள் தான் நமக்குத் கற்றுத் தருகின்றன.
 
இந்து தமிழ் திசை நாளிதழில் மகத்தான இந்திய நாவல்கள் என்ற தலைப்பில் எஸ்.ரா. முப்பது நாவல்களை அறிமுகம் செய்கிறார்.
 
இது குறித்து,
 
“இந்தியாவின் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நடத்த மாற்றங்களையும், இந்தியக் குடும்பத்தின் வேர்களையும், இந்திய வரலாற்றின் அறியப்படாத உண்மைகளையும், பெருநகரவாழ்வின் அவலங்களையும் நாவல்கள் சிறப்பாகப் பதிவு செய்திருக்கின்றன.
 
இந்திய நாவல்களுக்கென்றே தனித்துவமான கதை சொல்லும் முறையும், வாழ்க்கைப் பார்வையும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
 
முப்பது வாரங்கள் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் மகத்தான இந்திய நாவல்களைக் கவனப்படுத்துகின்றன என்று முன்னுரையில் இவ்வாறு பதிவு செய்கிறார்.
 
நாவலின் மையத்தை அதன் சுவை குன்றாமல் நான்கு முதல் ஐந்து பக்கங்களில் கூறி நாவலை அறிமுகம் செய்வதோடு நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறார்.
 
எஸ்.ரா.வின் எழுத்து நடை அப்படியான உணர்வோட்டத்தைக் கொண்டது. அவருடைய கட்டுரையின் எழுத்து நடை வாசிக்க வாசிக்க திகட்டாதது.
 
மகத்தான இந்திய நாவல்கள்:
 
1. கவிதாலயம் – நேஷனல் புக் டிரஸ்ட்
2.நிலகண்ட பறவையைக் தேடி – நேஷனல் புக் டிரஸ்ட்
3.கறுப்பு மண் – நேஷனல் புக் டிரஸ்ட்
4. சிவப்பு தகரக்கூரை – காலச்சுவடு
5. நெருங்கி வரும் இடியோசை – சுவாசம்
6.இரண்டாம் இடம் – சாகித்திய அகாதமி
7.கங்கைத்தாய் – நேஷனல் புக் டிரஸ்ட்
8.எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது – சாகித்திய அகாதமி, காலச்சுவடு
9. மண் பொம்மை – சாகித்திய அகாதமி
10.ஜுவாலாமுகி – நேஷனல் புக் டிரஸ்ட்
11. சூரிய காந்திப்பூவின் கனவு – நேஷனல் புக் டிரஸ்ட்
12. அக்னி சாட்சி – சாகித்திய அகாதமி
13. தர்பாரி ராகம் – நேஷனல் புக் டிரஸ்ட்
14. கனவில் தொலைந்தவன் – சாகித்திய அகாதமி
15. சூளை – கண்மனி கிரியேட்டிவ் வேவ்ஸ்
16. துருவ நட்சத்திரங்கள் – நேஷனல் புக் டிரஸ்ட்
17. பாண்டவபுரம் – கிழக்கு பதிப்பகம்
18. சிக்கவீர ராஜேந்திரன் – நேஷனல் புக் டிரஸ்ட்
19. மனோதிடம் – சாகித்திய அகாதமி
20.கறையான் – நேஷனல் புக் டிரஸ்ட்
21.கோதானம் – அன்னம்
22. அரை நாழிகை நேரம் – நேஷனல் புக் டிரஸ்ட்
23. கவி – நேஷனல் புக் டிரஸ்ட்
24.மலைமேல் நெருப்பு – சாகித்திய அகாதமி
25. பாம்பும் கயிறும் – சாகித்திய அகாதமி
26. திரௌபதியின் கதை – சாகித்திய அகாதமி
27. சுமித்ரா – வம்சி புக்ஸ்
28. சோமனின் உடுக்கை – கலைஞன் பதிப்பகம்
29. சோறு தண்ணீர் – நேஷனல் புக் டிரஸ்ட்
30. ஆரச்சார் – சாகித்திய அகாதமி
 
மேற்குறிப்பிட்ட நாவல்களில் 9-ம் நாவலிலிருந்து அந்நாவலின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளரைக் குறிப்பிட்ட எஸ்.ரா. வெளியிட்ட பதிப்பகத்தைக் குறிப்பிட்டவில்லை. இணையத்தில் தேடியும் நண்பர்களிடம் கேட்டும் பதிப்பகங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.
 
ஜுவாலாமுகி மற்றும் சோமனின் உடுக்கை ஆகிய நூல்களை வெளியிட்ட நிறுவனம் குறித்த தகவல் இணையத்தில் கிடைக்கவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.
 
இந்நாவல்களை வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அந்த அடிப்படையில் தான் பதிப்பகங்களைத் தேடி இணைத்துள்ளேன்.
 
– பூபாலன்
 
************
 
நூல்: நாவல்வாசிகள்!
ஆசிரியர்: எஸ் ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள்: 133
விலை: ரூ.160/-
Comments (0)
Add Comment