ஒப்பனையில்லாத இயல்பான புன்னகை போதும்!

நூல் அறிமுகம்:

கவிஞரே தன் கவிதைகள் பற்றிச் சொல்வதுபோல, இவை எளிமையான வெளிப்பாடுகள்தான்.
 
ஆனால், உழுசால் செதுக்கிச் செல்லும் கொழுமுனையின் எளிமை. போலித்தனமோ, வெற்று ஆரவாரமோ சற்றும் இல்லாதவையே.
 
எனில், மழைப் பறவையின் குரல் கணவாயில் எதிரொலிக்கும் அப்பட்டம். உண்மையானவை என்பதை ஆமோதிக்கும் முகாந்திரம்.
 
என்னைக் கரைந்தழைக்கும் நண்பனாக நானும் காகத்தைப் பார்க்கிறேன்; என்னிடமும் எப்போதும் உள்ளது.
 
ரகசியக் கூர்வாள் ஒன்று; நானும் பரபரப்புடனும் பதைபதைப்புடனும் வாழ்க்கையைத் தொடர்கிறேன்.
 
அப்போதெல்லாம் நானும் ஏங்குகிறேன்; ‘இந்த மனித முகங்களில் பொய்மையற்ற இயல்பான புன்னகை மலர்ந்தால் போதுமே. ஏதேனும் ஒரு மலர்போல. 
 

– யூமா வாசுகி

ராஜமார்த்தாண்டன் (1948) அ. ராஜமார்த்தாண்டன் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் முனைவர் பட்டத்துக்காக மூன்றாண்டுகளுக்குமேல் புதுக்கவிதையில் ஆய்வு செய்தார்.

1976 – 1983 வரை ‘கொல்லிப்பாவை’ இலக்கியக் காலாண்டிதழை (12 இதழ்கள்) ஆசிரியராக இருந்து நடத்தினார்.

‘தினமணி’ நாளிதழின் ஆசிரியர் குழுவில் இருபது ஆண்டுகள் பணியாற்றினார்.

கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ‘புதுமைப்பித்தனும் கயிற்றரவும்’ (2000), ‘ராஜ மார்த்தாண்டன் கவிதைகள்’ (2002), ‘புதுக்கவிதை வரலாறு’ (2003) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

‘கொங்குதேர் வாழ்க்கை-2’ (நவீன கவிதைகளின் தொகுப்பு) உள்பட சில நூல்களையும் தொகுத்துள்ளார்.

இவரது நூல்கள்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)
என் கவிதை (கவிதைகள்)
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு)
கொங்குதேர் வாழ்க்கை
கொங்குதேர் வாழ்க்கை தொகுதி இரண்டு
கொங்குதேர் வாழ்க்கை – 3 (தொகுப்பு, தமிழினி)
புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி)
புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி)

***********
நூல்: ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
ஆசிரியர்: ராஜமார்த்தாண்டன் ()
குலுங்கா நடையான்
விலை: ரூ. 238/-

Comments (0)
Add Comment