போதை படுத்தும் பாடு…!

செய்தி:

கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, வட மாநில இளைஞர் முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம்.

– ஆம்புலன்ஸில் உடன் செல்லாமல் அலட்சியமாக செயல்பட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு.

கோவிந்த் கமெண்ட்:

அந்த 4 சிறுவர்களும் பட்டாக் கத்தியை சுழற்றியபடி வட மாநில இளைஞரை படுத்திய பாடு சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேசமயம் வடமாநிலத்து போலீஸ் அதிகாரி ஒருவரே அவர்கள் கஞ்சா உபயோகிக்கவில்லை என்று பேட்டி அளிக்கிறார்.

பிடிபட்டதில் ஒரு சிறுவனை மட்டும் உடனே விடுவிக்கிறார்கள்.

இன்னும் இதில் எத்தனை மர்மங்கள் நிறைந்திருக்கிறதோ தெரியவில்லை.

Comments (0)
Add Comment