நம்பிக்கை நல்ல மாற்றங்களை நிச்சயம் தரும்!

கலை நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் என்றான வாழ்வியக்கம் என்பது, பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராம் (பிரமிள்) போன்ற நம் லட்சிய முன்னோடிகள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் பாதைதான்.

அவர்கள் காலத்தைவிடவும் சூழல் சற்று மேம்பட்டிருக்கிறது.

எந்தவொரு காத்திரமான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் காலகதியில் நல்ல மாற்றங்களை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நம்முடைய ஆகச் சிறந்த அம்சத்தில் நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

வாழும் காலத்தில் அது உரிய பலன்களை அளிக்காவிட்டாலும், காலகதியில் அது சமூகத்தில் காத்திரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனினும் இன்றைய சூழல் ஓரளவு அனுசரணையாகவே இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கைப்பாடுகளை ஓரளவு சமாளிக்க ஏதுவாக இன்றைய சூழல் இருக்கிறது. இதுவே பெரிய விசயம்தான்.

  • எழுத்தாளர் சி.மோகன்

– நன்றி : விகடன்

Comments (0)
Add Comment