ரசனைக்குரிய சில தருணங்கள்!

ஹீரோ என்றால் வாட்டசாட்டமான உடல்வாகு, வாள் சண்டை தெரிந்திருக்க வேண்டும், நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த நிலையில் முதன் முதலாக ஒரு காமெடி கதையை மையமாகக் கொண்டு ஹீரோவாக நடித்தார் என்றால் அதுதான் டிஆர் ராமச்சந்திரன்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ’நந்தகுமார்’ என்ற திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். 1938-ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

‘நந்தகுமார்’ வெற்றிக்கு பிறகு அவருக்கு வாயாடி, சபாபதி, கண்ணகி, பிரபாவதி உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற திரைப்படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ என்பதும், சிவாஜி இரண்டாவது ஹீரோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி நடித்திருந்தார்.

டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பத்மினியின் சகோதரி ராகினி நடித்திருந்தார். கடந்த 1954-ம் ஆண்டு வந்த இந்த காமெடி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடம், குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

எம்ஜிஆர் நடித்த பாசம், சிவாஜி நடித்த ஆலயமணி, அறிவாளி, இருவர் உள்ளம் ஆகிய படங்களிலும் கண்ணதாசனின் வானம்பாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தாலும் முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

1954-ம் ஆண்டு இவர் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பொன்வயல் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார்.

டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு 1948-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஜெயந்தி, வசந்தி ஆகிய இரண்டு மகள்கள் இவருக்கு இருக்கின்றனர்.

குறிப்பு : 1956-ல் டி.ஆர்.ராமச்சந்திரன் சென்னையிலிருந்த தனது வீட்டில், தன் மகள்கள் ஜெயந்தி மற்றும் வசந்தி சிறு குழந்தைகளாக இருந்தபோது, அவர்களை ரசித்து கேமராவில் படம் பிடித்த தருணத்தில், எடுக்கப்பட்ட புகைப்படம்.

Comments (0)
Add Comment