தமிழ் சினிமாவின் பெருமைமிக்க அடையாளம்!

அருமை நிழல்:

காமிரா கவிஞர் இயக்குநர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர்.

பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப் பதக்கம் பெற்றார்.

ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம்.

முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குநராக மாறி சிறந்த இயக்குநராக 3 தேசிய விருதுகளையும் ஒளிப்பதிவாளராக 3 தேசிய விருதுகளையும் வென்று சினிமா துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குறிப்பு:

கமல்ஹாசன், ஸ்ரீதேவியுடன் ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் டப்பிங் பணியில் இயக்குநர் பாலுமகேந்திரா ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பின்னர் இந்தப் படம் இந்தியில் ‘Sadma’ என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

Comments (0)
Add Comment