தமிழ் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கிய மணமகள்!

அருமை நிழல்:

1950 – களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

அதை அப்போதைய நண்பரான கலைஞரிடம் சொன்னார். பின்னர், சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர் அடூர் முன்ஷி பரமேஸ்வரன் பிள்ளையும், கலைஞரும் இணைந்து திரைக்கதை உருவாக்கினர். படத்தின் வசனம் முழுமையாக கலைஞர் எழுதினார்.

கட்டாயத் திருமணமும், பெண் சுதந்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை கலைவாணர் தயாரித்து இயக்கினார்.

1951 ஆகஸ்டில் வெளிவந்த ‘மணமகள்’ படம் மிகப்பெரிய வெற்றியையும், கலைவாணருக்கு மீண்டும் வாழ்க்கையும் மீட்டுக் கொடுத்தது.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அடுத்த மாதமே கலைஞருக்கு ஒரு ஸ்டாண்டர்ட் காரை பரிசாக அளித்தார் கலைவாணர். அந்தக் காருடனும் அறிஞர் அண்ணாவுடனும் கலைஞர் எடுத்துக்கொண்ட படம் இது.

ஆனந்த்குமார் சித்தன்

Comments (0)
Add Comment