ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர் தரப்புக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி “உச்சநீதிமன்றம் தரப்பில், ஆளுநர் நீண்ட காலத்திற்கு மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதனை சட்டசபைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்.

நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால், அதனை சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஒரு சட்டப்பிரிவுக்கு 2 வகையான வாய்ப்பு இருந்தால், எது சுமூக நிலையோ, அதையே பின்பற்ற வேண்டும்.

ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதானை ஆய்வு செய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது தான்.

ஆளுநர் காரணத்தை தெரிவிக்காமல் நீண்ட காலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.

அரசியல் சட்டம் சில தனி உரிமைகளை ஆளுநருக்கு வழங்கி இருக்கிறது. காரணமின்றி மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், ஜனாதிபதிக்கு அனுப்பலாம் அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம் ஆகிய 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. 3ல் ஒன்றை தேர்ந்தெடுப்பதே ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையுமே முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும்.

ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது.

மத்திய அரசு கூறுவதை போல் ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4-வது வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளது.

 
Comments (0)
Add Comment