ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஜான் ஸ்டுவர்ட் மில் சொன்ன எச்சரிக்கையைப் பின்பற்ற வேண்டும்.
மாபெரும் மனிதராக இருந்தாலும், தங்களின் சுதந்திரத்தை அவர்களின் காலடியில் வைப்பது கூடாது. நிறுவனங்களைத் தாழ்த்தி விடும் அளவுக்கு அதிகாரங்களை அவர்களிடம் ஒப்படைப்பதோ, நம்புவதோ கூடாது.
நாட்டுக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்த மனிதர்களுக்கு நன்றியுடன் இருப்பதில் தவறு இல்லை.
ஆனால், அந்தப் பெரிய மனிதத் தன்மைக்கும் எல்லைகள் உள்ளன. இந்தியாவைப் பொருத்த மட்டிலும் பக்தி அல்லது பக்தி மார்க்கம் அல்லது வீரவழிபாடு என்பது மிகப்பெரிய அளவில் வேறு எந்த நாட்டுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு அரசியலில் பங்கு வகிப்பதாக இருக்கிறது.
ஆன்மாவின் முக்திக்கான வழியாக பக்தி இருக்கலாம்.
ஆனால், அரசியலில் பக்தி அல்லது வீர வழிபாடு என்பது தாழ்வுக்கும், சர்வாதிகாரப் போக்குக்கும் அழைத்துச் செல்லும் நிச்சயமான ஒரு பாதையாகும்.
– டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
தமிழில் : Indran Rajendran