நாடகமாகும் சிவசங்கரியின் சிறுகதைகள்!

கேள்வி:
 
எழுத்தாளர் சிவசங்கரியின் சிறுகதைகளை நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
 
தாரிணி கோமல் பதில்:
 
எழுத்தாளர் சிவசங்கரியும் என் தந்தை கோமல் சுவாமிநாதனும் இலக்கிய ரீதியில் நெருங்கிய நண்பர்கள்.
 
அப்பா ‘சுபமங்களா’ என்ற பத்திரிகையை ஆரம்பித்தபோது, அந்த நிகழ்ச்சியில் சிவசங்கரி பங்கேற்றார். அப்பா காலமானபோது எங்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார் சிவசங்கரி.
 
சிவசங்கரியின் சிறுகதைகள், நாவல்களை நான் சிறுவயது முதலே விரும்பிப் படிப்பேன். அவரது பல கதைகள் என்னைப் பெரிதும் பாதித்திருக்கின்றன.
 
நான் நாடகத் துறைக்கு வந்தவுடன் அவரது சிறுகதைகளை நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாகவே எனக்குள் இருந்து வருகிறது.
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியக் கூட்டம் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது என் ஆசையைத் தெரிவித்தேன்.
 
“நீ நாடகமாகத் தயாரிக்கிறாய் என்றால் கண்டிப்பாகத் தருகிறேன்” என்றார் சிவசங்கரி.
 
என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை என்னைப் பரவசப்படுத்தியது. வரும் அக்டோபர் மாதம் சிவசங்கரிக்கு 83-வது பிறந்த நாள்.
 
அவரது சிறுகதைகளை நாடகமாக்கி, பிறந்த நாள் பரிசாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அவர் எங்களுடன் நன்கு ஒத்துழைத்து, எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார்.
 
நாடகமாக வரப் போவது குறித்து சிவசங்கரியின் ரசிகர்கள் மத்தியிலும் நிறைய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
எனவே எங்களுக்கும் பொறுப்பு அதிகமாக உள்ளது. சென்னை நாரத கான சபாவில் அக்டோபர் 25-ம் தேதி மாலை இந்த நாடகம் அரங்கேறுகிறது.
 
நன்றி: தினமணி
Comments (0)
Add Comment