அரசியல் தலைவர்களைத் திரையில் தேடுவது சரியா?

எழுத்தாளர் விட்டல் ராவ் பதில்

கேள்வி:

பொதுவாகத் தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களைத் திரையில் தேடுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

எழுத்தாளர் விட்டல் ராவ் பதில்:

ஒரு காலத்தில் அண்ணா திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். அவர் நடித்தும் இருக்கிறார்.

அதேபோல் கலைஞர் கருணாநிதி திரைப்படங்களில் வசனம் எழுதினார், பணியாற்றினார்.

அவர்கள் மேல் மக்களுக்கு ஒரு மதிப்பு வந்தது. அவர்களுக்குத் தலைவராக இடம் கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு எம்.ஜி.ஆருடைய படங்களைப் பார்த்து அவர் மேல் ஒரு நம்பிக்கை வைத்தார்கள். அவரையும் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.

அவர்களுக்குப் பிறகு விஜயகாந்த், கமல் வந்தார்கள். ஆனால் நீடிக்க முடியவில்லை.

எல்லா நடிகர்களுக்கும் அரசியலில் வருவதற்கு ஆசை இருக்கிறது. ஆனால், மக்களிடம் அபிமானம் பெறுவது வேறு, வாக்களிப்பது என்பது வேறு என்று இருக்கிறது.

திரைப்பட நடிகர்களை வேடிக்கைப் பார்க்க வருவது வேறு, தலைவராக ஏற்றுக் கொள்வது வேறு.

ஒரு காலத்தில் இருந்த தேவையால், அந்த இடத்தை நிரப்ப திரைப்படங்களிலிருந்து தலைவர்கள் வந்தார்கள். அப்போது மக்களிடம் ஏற்பிருந்தது. இப்போது அந்த நிலை இல்லை.

– நன்றி: அந்திமழை

Comments (0)
Add Comment