நல்லதே நடக்க வேண்டும்!

மருத்துவர் ராமதாஸுக்கு கலைஞர் எழுதிய கடிதம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து ரீதியான மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் 2000-ம் ஆண்டில் மருத்துவர் ராமதாஸூக்கு தி.மு.க தலைவர் கலைஞர் கைப்பட நட்புணர்வுடன் எழுதிய கடிதம் இது. (தமிழக அரசியலில் கூட்டணிகள் மாறுவதற்கான அறிகுறிகள் தோன்றிக் கொண்டிருந்த நேரமது.)

****

 

 

திரு.டாக்டர் இராமதாஸ் அவர்கள்,
நிறுவனர், தலைவர்,
பாட்டாளி மக்கள் கட்சி.

அன்பிற்குரிய டாக்டர் அவர்களுக்கு, வணக்கம்.

தங்களின் பதினெட்டு பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். ஓயாத வேலைத்தொல்லை. பிரச்சினைகள் அதைப் போல. விளக்கமாகத் தங்களுக்குப் பதில் மடல் எழுத வேண்டும். அதற்கு ஒருவார காலம் இடையில் தேவைப்படுகிறது. பதில் எழுதுகிறேன். நல்லதே நடக்க வேண்டும் என்பதே என் தணியாத ஆவல். தாமதமாகப் பதில் தருவதற்குப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

அன்பு மறவாத  மு.கருணாநிதி

சென்னை 

02.05.2000  

– மணா எழுதிய ’கலைஞர் என்னும் மனிதர்’ நூலிலிருந்து…

Comments (0)
Add Comment