குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரும் கவனம் பெற்ற ‘அன்னக்கிளி’!

இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த முதல்படமான ‘அன்னக்கிளி’ படத்திற்கு திரைக்கதை அமைத்தவர் செல்வராஜ்.

இயக்குநர் பாரதிராஜாவின் பல படங்களுக்கு கதை எழுதியிருக்கிற அவருக்கு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாய்.

படம் முழுக்க கிராமத்து மண் வாசனையுடன் பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்த இளையராஜாவுக்கும் இந்தப் படத்தில் கொடுக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாய்தான்.

அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சிவகுமார் தான் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று ‘அன்னக்கிளி’ படமாக்கப்பட்ட அந்தக் கிராமத்தைத் தேர்வு செய்திருக்கிறார்.

சிவகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன் என்று பலரும் அந்த சிறு கிராமத்து வசதிக்குள்ளேயே தங்கி அந்தப் படத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

இந்தத் தகவலை அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தவர் ‘அன்னக்கிளி’ படத்தின் கதாசிரியரான செல்வராஜ்.

மொத்தமே ரூ. 4 லட்சத்தில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட முதல் 2 நாட்களில், சற்றே கூட்டம் குறைந்த நிலையில் இருந்தாலும், அதற்கு பிறகு வாய்மொழி விளம்பரத்தில் பிக்கப் ஆகி படம் பெரிய ஹிட்.

Comments (0)
Add Comment