சின்மயியின் ரசிகை நான்!

பாடகி சித்ரா புகழாரம்

அண்மையில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினருடன் சின்மயி பாடிய “முத்தமழை இங்கு கொட்டித் தீர்க்காதோ” என்று, குரலில் நிறைய நெளிவு சுளிவுகளுடன் பாடிய பாடலுக்கு ரசிகர்களிடையே ஏக வரவேற்பு.

அதிலும் சமூக வலைதளங்களில், சின்மயி பாடிய பல பாடல்களைத் தொகுத்து வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

சின்மயி மீது மீடியாவின் வெளிச்சம் திரும்பவும் பரவலாக விழுந்த சூழலில், அவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது ஏசியா நெட் தொலைக்காட்சி.

அது ஒரு சூப்பர் சிங்கர் இசைப் போட்டி நிகழ்ச்சி. ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக மூத்தப் பாடகிகளுக்கிடையே அமர்ந்திருந்தவர் நம்ம ஊர் சின்னக்குயில் சித்ரா தான்.

படப்பிடிப்பு நடந்த அந்த வெளிச்சமான அரங்கிற்குள் சின்மயி நுழைந்ததும், அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கரகோஷம். ஏற்கனவே நடுவர்களாக வந்திருந்தவர்கள் சித்ரா உட்பட எழுந்து நின்று சின்மயிக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

அப்போது, முகத்தில் வழக்கமான புன் சிரிப்புடன் சித்ரா சொன்னார், “நான் சின்மயியின் ரசிகை”.

மூத்த பாடகியான சித்ராவே அப்படிச் சொன்னபோது, அரங்கிற்குள் நுழைந்த சின்மயி முகமெல்லாம் பரவசம்.!

Comments (0)
Add Comment