கனவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்!

நூல் அறிமுகம் :

ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெரியுமா?

இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.

ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்ற நூலும் ஒன்று.

கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால், அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம்.

ஆனால், இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.

உப தலைப்புகளை வாசிக்கும் போதே நாகூர் ரூமி அவர்களின் கடுமையான உழைப்பு தென்படுகிறது.

கனவின் குணாம்சங்கள் பற்றி ப்ராய்டு இவ்வாறு கூறுகிறார். “கனவு தானாக எதையும் சொல்வதில்லை. நம் நனவு வாழ்வின் அனுபவங்களிலிருந்து அது காட்சிகளை அமைகிறது. கனவுக்கு அபார ஞாபக சக்தி உண்டு”.

பொதுவாக நமக்கு சாதாரணமாக வரும் கனவுகளின் மூலம் கனவு காண்பதற்கு முந்திய நாள் அல்லது அதற்கு முந்திய நாள் நிகழ்ச்சியாக இருக்கும்.

எல்லாக் கனவுகளும் பெரும்பாலும் குறியீட்டுத் தன்மை கொண்டவை. கனவின் காட்சிகளே குறியீடுகள்.

ஒவ்வொரு கனவும் ஏதோ ஒரு விதத்தில் நம் ஆழ்மனதில் இருக்கும் விருப்பம் என்று நிறைவேற்றி விட்டதாக காட்டும் அது பெரும்பாலும் பாலுணர்ச்சியை சம்பந்தபட்டதாகவே இருக்கும்.

கனவுகள் நம்முடைய வாழ்வில் தனித்தனியே பார்க்கும்போது சம்பந்தமற்ற பல விஷயங்களை ஏதோ ஒரு தொடர்பின் அடிப்படையில் ஒன்று சேர்த்து காட்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை.

கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் அவை அப்படி அல்ல. கனவுகள் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை வாய்ந்தவை.

இக்கருத்து தவறானது என்று வாதிடுவதற்கு இல்லை. இயற்கை உளவியலில் இதற்கு விளக்கம் காண முடியும் என்று ப்ராய்டு கூறுகிறார்.

*****

நூல் : கனவுகளின் விளக்கம்
ஆசிரியர்: சிக்மண்ட் பிராய்ட்

தமிழில்: நாகூர் ரூமி
பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 70/-

Comments (0)
Add Comment