உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க உணவுகளில் பிரதானமாக இருப்பது பால் பொருட்கள். அந்த வகையில் பால் பொருட்களின் ராணியாக பார்க்கப்படுவது சீஸ்.
இதை பெருமைப்படுத்தும் விதமாக இன்று ஜூன் 4 ஆம் தேதி தேசிய சீஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய சீஸ் தின வரலாறு
கிமு 8000 ஆம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் எப்போது விலங்குகளை வளர்க்க தொடங்கினானோ அப்போதே அதன் வரலாறு ஆரம்பமானது.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் சீஸ் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளது.
இதில் கி மு 5500 ஆம் ஆண்டு போலந்தின் குயாவியாவில் பால்-கொழுப்பு மூலக்கூறுகளில் பூசப்பட்ட வடிகட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கிமு 2000 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள சுவரோவியங்களில் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங்கில் பகுதியில் சீஸின் ஒரு கலைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின் ஐரோப்பிய, ஆசியா, துணை சஹாரா ஆப்பிரிக்கா வழியாக இறுதியில் அமெரிக்காவிற்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.
இத்தனை பெருமை மிகு வரலாறு கொண்ட சீஸ் தற்போது பெரும்பாலான நவநாகரிக உணவுகளில் இதன் ஆதிக்கம் அதிகம்.
பீட்சா, பர்கர், குக்கீஸ், மாக்கரன்னி சீஸ், சீஸ் பர்கர், கிரீமி கேசரோல்ஸ், சீஸ் பாஸ்தா, சீஸ் டோஸ்ட் இப்படி வாயில் நுழையாத பெயர்களுடன் நிறைய உணவுகள் நீண்டு கொண்டே போகும் அதன் பட்டியல்.
இப்படி ஒவ்வொரு கண்டத்திலும் சீஸ் உணவுகள் காரம்
மற்றும் இனிப்பு சுவைகளில் உணவுகளாக பரிணாம வளர்ச்சியுடன் பல வகைகளில் கிடைக்கிறது.
பாலில் இருந்து பலவகையான உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் சீஸ் தான் உலக அளவில் நவ நாகரிக உணவின் ராணியாக வலம் வருகிறது.
சீஸ் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும் இதில் இருக்கும் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் சீஸ் ஆரோக்கியமற்றது என்று பலராலாக ஒரு கருத்தும் உலவுகிறது.
இருந்தாலும் ஆய்வுகளின் கூற்றுப்படி நிறைவுற்ற கொழுப்புக்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளதாக கூறுகின்றனர். சீஸில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
சீஸ் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 அவுன்ஸ் சீஸ் உட்கொள்வதால் இதய நோயின் அபாயம் 18 சதவிகிதமும் 1/2 அவுன்ஸ் சிறிய அளவு சீஸ் எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு அபாயத்தை 13 சதவீதம் குறைக்கும் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கன் ஜெர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் ஒருங்கிணைந்த ஆய்வுகளின் கூற்றுப்படி தினமும் 3/4 அவுன்ஸ் சீஸ் உட்கொள்வது டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தை 8 சதவீதம் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும், சீஸில் இருக்கும் கால்சியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு ஐரோப்பிய நடத்திய ஆய்வில் நாள் ஒன்றுக்கு 2 அவுன்ஸ் சீஸ் உட்கொள்வதன் மூலம் ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் இதில் இருக்கும் கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் மற்றும் சீஸ் உள்ளிட்ட உணவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த முடியும் எனவும் கூறுகின்றனர்.
50 வயதை கடந்தவர்கள் தினமும் ஒரு கப் ரிக்கோட்டா சீஸ் எடுத்துக் கொண்டால் தசை வளர்ச்சி மற்றும் உடல் வலிமையை அதிகரிக்க செய்யும் என ஆய்வு முடிவுகள் சொல்கிறது.
இதில் இருக்கு நல்ல கொழுப்பானது சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது அது உடலுக்கு பல நன்மைகளை வளங்குவதாக கூறப்படுகிறது.
பல நன்மைகளைக் கொண்ட சீஸ் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை எப்படி தாயரிப்பது பார்க்கலாம்.
சீஸ் மக்ரோனி
தேவையான பொருட்கள்:
மக்ரோனி – தேவையான அளவு
சீஸ் – 2 பீஸ்
வெண்ணெய் – 4ஸ்பூன்
மைதா – 2ஸ்பூன்
பால் -2 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
செய்முறை: தேவையான தண்ணீர் ஊற்றி மக்ரோனி வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மைதா, பால், வெண்ணெய்- 1ஸ்பூன், உப்பு சிறிது சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கலந்து வைத்துள்ளதை அதில் ஊற்றி நன்கு காய்ச்சவும் வெண்ணெய் பதம் வரும்.
அதன் பிறகு வேக வைத்த மக்ரோனி சேர்த்து நன்கு கலந்த பின் சீஸ் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.
இவை இரண்டும் உருகி ஒன்று சேர்ந்து வரும் போது மக்ரோனிக்கு தேவையான உப்பு,மிளகுத்தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சீஸ் மக்ரோனி ரெடி.
ஆகவே எந்த உணவாக இருந்தாலும் காரணம் சொல்லி ஒதுக்காமல் அதன் நன்மைகளை தெரிந்து கொண்டு அளவுடன் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
ஜூன் – 4 : தேசிய சீஸ் தினம்.
– யாழினி சோமு