ஸ்டீவன் ஹாகிங்: முடிவிலிருந்து ஒரு தொடக்கம்!

நூல் விமர்சனம்:

“ஸ்டீவன் ஹாக்கிங் குறித்து தமிழில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன என்பது குறித்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அதே நேரம் தமிழ் இளைஞர்களுக்கு ஸ்டீவன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை, அறிவியலை, பங்களிப்பை எடுத்துச்சொல்ல வேண்டும்.

ஸ்டீவன் ஹாக்கிங் குறித்துப் பெரியவர்களுக்கு எழுதியுள்ள மூத்த எழுத்தாளரும் மொழிப் பெயர்ப்பாளருமான கமலாலயன் இந்த நூலை சிறப்புற எழுதியுள்ளார். ஸ்டீவன் ஹாக்கிங்கினுடைய வாழ்க்கை, பங்களிப்பின் முக்கிய அம்சங்களை இந்த நூலில் அழகாக வடித்துள்ளார்.

தமிழில் அறிவியல் நூல்கள் என்றால் பாதி புரியாது என்கிற விமர்சனம் வாசகர்களிடையே வலுவாக உள்ளது. அதை இந்த நூல் உடைத்திருக்கிறது. பதின்ம வயதினருக்குத் தமிழில் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டுவரும் ஓங்கில் கூட்டம் இந்த நூலை வெளியிடுவது மிகப் பொருத்தமானது.

ஓங்கில் கூட்டத்தின் பல நூல்கள் அறிவியலிலும் சமூக வரலாறு சார்ந்தும் இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. நமக்கு இன்றைக்குப் பெரிதும் தேவைப்படும் இது போன்ற நூல்கள் இன்னும் அதிகமாக வெளிவர இந்த நூல் ஒரு உந்துதலாக இருக்கட்டும்.”

கட்டணமின்றி பெற: https://www.amazon.in/dp/B0CDS64X6R

புத்தகம்: ஸ்டீவன் ஹாகிங் – முடிவிலிருந்து ஒரு தொடக்கம்
ஆசிரியர்: கமலாலயன்
வெளியீடு: ஓங்கில் கூட்டம்

– ஆதி வள்ளியப்பன்
எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்.

Comments (0)
Add Comment