அணுகுண்டு வீசி அமெரிக்கா நடத்திய நரவேட்டை!

ஆதிக்க வெறிப்பிடித்த அநியாயக்காரர்களிடம் (அமெரிக்கா) அணுகுண்டு கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை அகிலம் உணர்ந்துக் கொண்ட நாள் ஆகஸ்ட் 6 (ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாட்கள்).

உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசி 78 ஆண்டுகள் முடிந்து விட்டன.

இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெறும் முனைப்பில், ஹிட்லரின் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஓரணியிலும், ஃபிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஓரணியிலும் திரண்டன.

போரில் நேரடியாக பங்கேற்காத அமெரிக்கா, தனது Pearl துறைமுகம் மீதான ஜப்பானின் தாக்குதலுக்குப் பின்னர், நேரடியாகக் களமிறங்கியது.

Pearl துறைமுக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தனது ஆதிக்கத்தை நிரூபிப்பதற்காகவும், பல நாட்டு விஞ்ஞானிகள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட, “லிட்டில் பாய்” மற்றும் “ஃபேட்மேன்” என்ற அணுகுண்டுகளை தயாரித்த அமெரிக்கா, 1945-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி காலை, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது “லிட்டில் பாய்” அணுகுண்டை வீசியது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.

அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் உடல்நலம் பாதித்து மரணம் அடைந்தனர்.

அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் அனைவரும் அணுக்கதிர் வீச்சின் வீரியத்தால், நோயுடனேயே பிறந்தனர், கர்ணனோடு பிறந்த கவச குண்டலம் மாதிரி.

ஹிரோஷிமா பேரழிவை உலக நாடுகள் உற்று நோக்குவதற்குள், ஆகஸ்ட் 9-ம் தேதி, நாகசாகியில் “ஃபேட்மேன்” என்ற அணுகுண்டு வீசப்பட்டது.

இவ்விரு நகரங்களிலும் தற்போதுவரை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால், பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிறக்கும் குழந்தைகளும் ஊனமாக பிறக்கின்றன.

இந்நிலையில், ஹிரோஷிமா நகரில், அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதின் 78ம் ஆண்டு நினைவுதினம்  கடைபிடிக்கப்படுகிறது.

அமெரிக்கா என்ற குரங்கு கையில் சிக்கிய பூமாலையானது ஜப்பான்.

இந்தக் கொடூர, கொலைவெறித் தாக்குதலுக்குப் பிறகு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

ஒருவனைக் குத்தி விட்டு உறையில் உறங்கப் போய்விடும் கத்தி. ஆனால் குத்துபட்டவன்..?

ஜப்பான் மீது அணு குண்டுகள் வீசியதற்கு இன்றுவரை அமெரிக்கா மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்தது இல்லை. மக்கள் வசிக்கும் பகுதியில் அணுகுண்டு வீசி இருப்பது இன்றும் போர் குற்றமாகவே கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்‍கது.

இயற்கையால் உலகம் அழியாவிட்டாலும், மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால், அணுவால் அழியும் என்பதும், அணு ஆயுதப் பயன்பாட்டுக்கு தொடக்கப்புள்ளி வைத்தது அமெரிக்கா என்பதையும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

தன்னை அழிக்க நினைத்த ஆதிக்க சக்தியின் முயற்சியை அழித்துவிட்டு, ஆர்ப்பாட்டமாக இன்று உயர்ந்து நிற்கிறது ஜப்பான், தமது மக்களின் அயராத உழைப்பால்.

(நாகசாகி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 78-ஆம் ஆண்டு நிறைவு தினம் (ஆகஸ்ட் 6, 1945, ஆகஸ்ட் 9, 1945)
– லாரன்ஸ் விஜயன்

Comments (0)
Add Comment