சென்னை புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்!
சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள தற்கால தமிழ்ச் சிறுகதைகள் நூலை பாரதிபாலன் மிக நேர்த்தியாகத் தொகுத்துள்ளார். இதுபற்றி அவர் எழுதியுள்ள பதிவில், “காலந்தோறும் தொடர்ச்சியாக தமிழ்ச் சிறுகதைகள் மாற்றம் கண்டு வந்துள்ளன.
இந்த மாற்றம் சமூக வாழ்வில் ஏற்பட்ட அக, புற மாற்றங்கள். இதனைப் பண்பாட்டு மாற்றங்கள் எனலாம். வாழ்க்கை முறை, அதன் நடத்தை, எண்ணங்கள், விழுமியங்கள், கலை, பழக்கவழக்கங்கள், மொழி, நம்பிக்கை எனப் பல கூறுகளை உள்ளடக்கியது பண்பாடு” என்கிறார்.
மேலும், “இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் இத்தகைய கூறுகள் வெளிப்படுவதைக் காணலாம். அந்த நோக்கில் தொகுக்கப்பட்டதுதான் இத்தொகுப்பு. இக்கதைகளை நுட்பமாக வாசிக்கின்றபோது, நமது பண்பாட்டு வெளியை, அது காலந்தோறும் மாற்றம் கண்டு வந்துள்ள தன்மைகளையும் மாறாத மகிமைகளையும் அறியமுடியும்.
இக்கதைகளின் வழியே தமிழ் நிலத்தின் முகத்தையும், அதன் அகத்தையும் காணலாம்” என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிபாலன்.
தமிழ்ச் சிறுகதைகள்: பாரதிபாலன்
வெளியீடு: சாகித்ய அகாதெமி, விலை ரூ. 540