நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
‘வலிமை’ படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கொரோனா 3-ம் அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வலிமை படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.