டி.ஆர்.பாலு வாபஸ் வாங்கியது ஏன்?

செய்தி:

திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து முன்னாள் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை ‘திமுக ஃபைல்ஸ்’ வெளியிட்டதற்கு எதிராக மான நஷ்ட வழக்கை தொடர்ந்திருந்தார் முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பாலு.

அதற்கான விசாரணையும் நடந்த நிலையில் தற்போது அந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார் டி.ஆர்.பாலு.

கோவிந்த் கமெண்ட்:

தற்போது அந்த வழக்கை, வாபஸ் பெற்றிருப்பதன் மூலம் எதைச் சொல்ல முனைகிறார் டி.ஆர்.பாலு.

அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக டி.ஆர்.பாலு அன்று ஏன் வழக்குத் தொடர்ந்தார்? தற்போது, வழக்கிலிருந்து ஏன் பின்வாங்குகிறார்?

அப்படியென்றால், அண்ணாமலை வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை டி.ஆர்.பாலு ஒப்புக் கொள்கிறாரா?.

Comments (0)
Add Comment