சினிமா

அப்பாவின் வாசமும் புத்தகங்களின் வாசமும் வேறு வேறல்ல!

புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும் கூட. அவர் (சாமி பழனியப்பன்) பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர் பாரதி என்று பெயர் சூட்டினார். என் சின்னஞ்சிறு வயதில் அவர் ‘வாடா’ என்று என்னை அழைத்துக் கொண்டு போனால், அந்தப் பாதைகள் போய் சேர்கிற இடம் அச்சகம், பதிப்பகம், நூலகம், பழைய புத்தகக் கடை இப்படித்தான் இருக்கும். அவர் ஒரு புத்தகம் வாங்கினால் எனக்கொன்றும் வாங்கித் தருவார். […]

டிடெக்டிவ் உஜ்வாலன் – கிராமத்தில் நடக்கும் புலனாய்வு!

’மின்னல் முரளி படத்தில் வரும் காலகட்டம் மற்றும் நிலப்பரப்பு, கதை மாந்தர்களோடு தொடர்புடைய வகையில் உருவாக்கப்பட்டது’ என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. முந்தைய படத்தைத் தயாரித்த வீக்எண்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம், ‘வீக்எண்ட் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்ற பெயரில் இரு கதைகளையும் ஒரே கோட்டில் நிறுத்தியிருக்கிறது. இரண்டுமே தொண்ணூறுகளில் நிகழ்கிற கதைகள்; கேரளாவின் சாதாரண கிராமமொன்றில் நடக்கிற அசாதாரண நிகழ்வுகளைப் பற்றியது. முந்தையது ‘சூப்பர்நேச்சுரல் பேண்டஸி த்ரில்லர்’ என்றால், டிடெக்டிவ் உஜ்வாலனோ ஒரு ‘க்ரைம் […]

எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு…!

சமூக வலைதளங்களில் குழந்தைகளுடனான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள சினேகன் – கன்னிகா தம்பதி எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு… எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளனர்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ரேவதி!

23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ரேவதி மீண்டும் இணைந்திருப்பது, ரசிகர்கள், மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏஸ் – ஸ்வீட் சர்ப்ரைஸ்!

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி ஏமாற்றிய திரைப்படங்கள் ஓராயிரம். அதனாலேயே, இப்போதெல்லாம் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தியேட்டருக்கு வந்தா இந்த படம் ஆச்சர்யப்படுத்தும்’ என்று சொல்கிற ‘ட்ரெண்ட்’ தொடங்கியிருக்கிறது. சில வேளைகளில் அது பலன் தந்திருப்பதைக் கடந்த காலத் திரை வரலாறு சொல்கிறது. ‘மகாராஜா’ எனும் பெரு  வெற்றியைத் தந்த விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிற நேரத்தில் இதனைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ’ஏஸ்’ கதை! மலேசியாவுக்கு வந்திறங்குகிறார் ஒரு நபர் (விஜய் […]

நரிவேட்டை – இதில் என்ன செய்திருக்கிறார் சேரன்?

உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கொஞ்சம் கற்பனை சேர்த்துப் புனையப்படுகிற திரைக்கதைகள் ‘ஹிட்’ அடிக்கும். சமீபகாலமாக மலையாளத்தில் வெற்றி பெறுகிற பல திரைப்படங்கள் அப்படித் தயாரானவையாக இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘நரிவேட்டா’. தமிழில் இது ‘நரிவேட்டை’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. கேரளாவின் வயநாட்டிலுள்ள முத்தங்காவில் ‘அரசு வாக்குறுதி தந்தவாறு தாங்கள் வீடு கட்ட உடனடியாக நிலம் அளிக்க வேண்டும்’ என்று கோரி, 2003-ம் ஆண்டு சில பழங்குடியின […]