நாட்டு நடப்பு

எத்தனை முறை சேர்ப்பு, எத்தனை முறை நீக்கம்?

செய்தி:    அதிமுகவில் பதவி நீக்கப்பட்ட 400 பேருக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும்! – பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கடிதம். கோவிந்த் கமெண்ட்:  அதிமுகவை பொறுத்தவரை தற்போது நிலையாமைதான் நிலையாக இருக்கிறது. இன்று இருப்பவர் நாளை இதே கட்சியில் இருப்பாரா என்கிற அளவுக்குக் குழப்பம் தலைவர்களுக்கும் இருக்கிறது, அதிலுள்ள தொண்டர்களுக்கும் இருக்கிறது. அதுபோலத்தான் அண்மையில் நீக்கப்பட்டவர்களே மறுபடியும் இணைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். 

எது உண்மையான நாகரிகம்?

இன்றைய நச் : தனக்கு என்னென்ன வசதிகள் நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ அவற்றைச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம்! – தந்தை பெரியார்

மேகதாது பிரச்சனை: தற்போது என்ன செய்ய வேண்டும்?

கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றதிலிருந்தே மேகதாது அணைப் பிரச்சனையும், காவிரியில் நீர்ப்பாசனதுக்காக நீர் திறந்துவிடுவது குறித்த விமர்சனங்களும், எதிர்க்குரல்களும் இரு மாநிலத்திலேயுமே அதிகரித்திருக்கின்றன.  அண்மையில், தஞ்சையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தண்ணீர் வரத்துப் பற்றி கொச்சையாகப் பேச நேரலையாக பல தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்பட்ட எடிட் செய்யப்படாத அந்த காணொளி தமிழகம், கர்நாடகா மட்டுமல்ல வட இந்திய ஊடகங்கள் வரை பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பேச்சையொட்டிய […]

இந்தோ – சோவியத் நட்புறவு தழைக்கிறதா?

செய்தி :    80-வது ஆண்டில் இந்தியா – ரஷ்யா உறவு: இருதரப்பு பொருளாதாரத்தை ஒன்பது அரை லட்சம் கோடிக்கு உயர்த்த தீவிரம்! – இந்தியத் தூதர் தகவல். கோவிந்த் கமெண்ட்:  இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பட்டும் படாமலுமான நட்புறவு ஒருபக்கம் இருக்கிறதென்றால், மறுபக்கம் இந்தோ – சோவியத் நட்பும் கடந்த 80 ஆண்டுகளைக் கடந்து இன்று வரை நீடித்திருப்பது சர்வதே அளவில் ஆரோக்கியமானதுதான்.

கணக்கு வாத்தியாராக மாறும் எடப்பாடியார்!

செய்தி:    திமுக பாணியை தவெகவும் பின்பற்றுகிறது; வேளாண்மை பட்ஜெட்க்கு ‘மைனஸ் பூஜ்ஜியம்’ மதிப்பெண்! – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து. கோவிந்த் கமெண்ட்:  அதிமுக எம்எல்ஏ-க்களைத்தான் கண்காணித்து கணக்கெடுக்கிறார் என்று பார்த்தால், எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டையெல்லாம் கண்காணித்து அதற்கு மதிப்பெண்ணும் கொடுக்கிறார். முதல்நாள் பட்ஜெட்டுக்கு திமுக பூஜ்ஜியம் மதிப்புக் கொடுத்தால் மறுநாள் எடப்பாடியும் அதே பாணியில் பூஜ்ஜியம் மதிப்பு கொடுக்கிறார். எப்பேர்ப்பட்ட கணக்கு வாத்தியார்கள் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

போதைப்பொருள் கடத்தல்: துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி!

செய்தி:    போதைப் பொருள் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்:  அமெரிக்காவில் போதைப் பொருள் பரவலாகப் புழக்கத்தில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், போதை கடத்தல் தலைவனின் தலைக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 5 மடங்கு விலை கூடுதலாக தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், கடத்தப்படும் போதைப் பொருளின் மதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதை நீங்களே நிதானமாக கணக்குப்போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.