உண்மையைச் சொல்லும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்!
செய்தி: தவெகவில் இணைபவர்கள் எல்லோரும் தூய்மையானவர்கள் என சான்றளிக்க முடியாது! – தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து. கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர் சொல்வது உண்மைதான். தவெகவில் பல்வேறு கட்சிகளிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக வந்து சேர்கிறவர்கள் அதிகரித்திருக்கிற நிலையில், அவர்கள் அனைவருக்கும் தரச் சான்றிதழ் அளித்திவிட முடியாது தான். ஆனால், தவெகவில் சேர்கிறவர்கள் சேர்ந்த பிறகு எதாவது குற்றச் செயல்களை செய்தாலோ, முறைகேட்டில் ஈடுபட்டாலோ அதன் பலன் தவெகவைத்தான் […]
திமுக-அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தியா?
செய்தி: திமுக – அதிமுக கூட்டணி என்பது ஆதவ் அர்ஜுனா பரப்பும் வதந்தி! – முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கருத்து. கோவிந்த் கமெண்ட்: தற்போது திமுக – அதிமுக கூட்டணி பற்றிய வதந்தியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரப்புவதாகச் சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சரான சிவசங்கர். ஆனால், இத்தகைய கூட்டணி குறித்த வதந்தி தேர்தல் முடிந்த பிறகு உருவானதற்கு யார் காரணம்? அப்போதே அதை அதிமுக கூட்டணியிலும், திமுக கூட்டணியிலும் இருந்த கட்சித் தலைவர்களே சாட்சியம் சொல்லியிருக்கிறார்களே. […]
காவல் மரணங்கள் எப்போது முடிவுக்கு வரும்?
செய்தி: காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை! – சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உறுதி. கோவிந்த் கமெண்ட்: காவல் மரணங்கள் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில், சாத்தான் குளம் சாட்சியாக இருப்பதைப் போலவே திமுக ஆட்சியில் மடப்புரம் சாட்சியாக இருந்திருக்கிறது. தற்போது, தவெக ஆட்சியிலும் அதே மாதிரி ஒரு கொடுமையான தாக்குதல் நடந்து உயிரிழப்பு வரை சென்றிருக்கிறது. ஆக, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால், […]
அமைச்சரவைக் கூட்டத்திலும் அதே எச்சரிக்கை!
செய்தி: ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக பதவி பறிப்பு! அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை. கோவிந்த் கமெண்ட்: தான் பதவியேற்ற போதிருந்தே தான் ஊழலுக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார் தமிழக முதல்வரான விஜய். ஊழல் செய்யமாட்டேன், ஊழல் செய்தவர்களையும் விடமாட்டேன் என்று சமீபத்தில் கரூர் கூட்டத்தில் கூட எச்சரித்திருந்தார் விஜய். அதையே தான் தற்போது அமைச்சரவைக் கூட்டத்திலும் வலியுறுத்தியிருக்கிறார். இந்த எச்சரிக்கை அமைச்சர்களுக்கு மட்டுமானதல்ல. அமைச்சர்களை சுற்றியிருப்பவர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்குமே பொருந்தும். […]
இடைத்தேர்தல் – எடப்பாடியின் பேச்சு எதைக் காட்டுகிறது?
செய்தி: விராலிமலை இடைத்தேர்தலில் துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது. – புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி. கோவிந்த் கமெண்ட்: விராலிமலை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சொல்கிறபடி யார் ஜெயிக்கப் போகிறார்கள்? அல்லது தோற்கிறார்கள்? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் தமிழகத்தில், காலியாக இருக்கிற சில தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போதுதான் நடக்கும்? என்பதை முதலில் சொல்லுங்கள்.
பாஜக யார் பக்கம்?
திமுக-பாஜகவுக்கு் இடையே கூட்டணி நிலவுகிறதா? அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையில் அடிஷனலான ஒரு கூட்டணிக்கான சூழல் உருவாகி இருக்கிறதா?