இலக்கியம்

மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்!

மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜி. நாகராஜன். எழுத்தில் மட்டுமல்ல. சொந்த வாழ்க்கையிலும். இது அவரைப் பற்றிப் படிக்கும் போது தெரிகிறது. ஜி. நாகராஜனின் படைப்புகள், தனித்துவமானவை. அதற்கு முக்கியக் காரணம், அவர் பேசிய (எழுதிய) விஷயங்கள். அவையாவும் அக்காலத்தில் அவருடைய சக எழுத்தாளர்கள், பேசத் தயங்கியவை. தமிழ் இலக்கிய உலகில் அதுவரை நிலவி வந்த, காமத்தின் எல்லைகளை அனாயாசமாகத் தாண்டியவர் ஜி. நாகராஜன். ஜி. நாகரஜனின் படைப்புகளில் ஒளிவுமறைவு என்பதே கிடையாது. எல்லாமே நேரடியான […]

படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம்!

அருமை நிழல் :  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும்போது – படப்பிடிப்புத் தளத்தில் தான் சாப்பிடும் அதே உணவு வகைகளையே உடன் பணியாற்றும் சக நடிகைகள், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் என்று அனைவருக்கும் பாகுபாடில்லாமல் வழங்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் வழக்கமான செயல்பாடாக இருந்திருக்கிறது. அம்மாதிரியான படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நிற்பவர் ஜெயலலிதா.  

அ.ச.ஞா. என்னும் அருந்தமிழ்ப் படைப்பாளி!

நூல் அறிமுகம் :   தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.   அவரது அனைத்துத் தமிழ்ப் பணிகளையும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.   தனது ஒன்பதாவது வயதில் துறையூர் சைவ சமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசினார் அ.ச.ஞா.   அதனைத் தொடர்ந்து பதினைந்தாவது வயதில், தூத்துக்குடியில் வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் […]

திரு.வி.க.விடம் ஒற்றைக் கோரிக்கை வைத்த மனைவி!

‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ – என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே அவர் பெயரின் சுருக்கம். அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் ‘தமிழ்த் தென்றல்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். ஒற்றுமையைக் குலைக்காத, அமைதியே உருவான கமலாம்பிகை என்ற நங்கையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார் […]

நித்யஸ்ரீயின் இசையார்வத்தின் பின்னணி!

அருமை நிழல் : பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி.கே. பட்டம்மாளின் மகன்வழிப் பேத்திதான்  பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தியும் கூட. பாட்டியைப் போலவே, நித்யஸ்ரீயும் பாபநாசம் சிவன் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதி ஆகியோரின் பாடல்களை மேடையில் பாடிப் புகழ்பெற்றார். பாபநாசம் சிவனின் இசைத் தொகுப்புகளை இரண்டு ஆல்பங்களாக வெளியிட்ட நித்யஸ்ரீ, ‘பாபநாசம் சிவன் – எ லெஜென்ட்’ என்ற தலைப்பில் ஒரு விரிவுரையும் கொடுத்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இசை […]

மனிதர்களின் பொதுவான குணம்!

வாசிப்பின் ருசி : மனிதர்களுக்கு உரிய ஒரு பொதுவான தன்மை ‘காபி’யடிக்கிறது. நீ ஒரு காரியம் பண்ணேன்னா அது உன்னோட போறதில்லே, அந்த காரியம் பண்ணும்போது பாத்த இன்னொருத்தனும் அதையே பண்ண ஆரம்பிக்கிறான். அப்படியே அந்த காரியம், உலகம் உள்ள வரைக்கும், மனுஷன் உள்ள வரைக்கும் இருக்கும். மனுசனும் அவன் நாகரிகமும் வளர்ந்ததே இப்படித்தான். – எழுத்தாளர் ஜெயகாந்தன்