அறிவியலை அறிய விரும்புவோருக்கான நூல்!

நூல் அறிமுகம்:

அறிவியல் சம்பந்தபட்ட தகவல்களை அனைவருக்கும் புரிய வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் இந்நூலில் அறிவியலில் அவ்வளவாக நாட்டமில்லாதவர்கள் கூட கூர்ந்து கவனித்துத் தெரிந்து கொள்ளும் விதமாக சிறப்பாக படைப்பை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர் ஈ.கோலை.

வாசகர்களுக்கு எந்த இடத்திலும் சலிப்பு தட்டி விடாமல் நகைச்சுவை உணர்வுடன் சிந்திக்க வைக்கும் விதமாக பல சுவரஸ்யமான நாமறிந்திராத ஆச்சரியமூட்டும் அறிவியல் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.

எதிர்காலத்தில் அறிவியல் வளர்ச்சியில் டிஎன்ஏ (DNA)-வினால் தகவல்களை சேமிக்கும் டிரைவால் நிகழவிருக்கும் செய்திகளை சிறுபிள்ளைக்கு கற்றுத் தரும் விதமாக டிஎன்ஏ என்றால் என்ன? திசு, செல், ஏடிஜிசி (ATGC) ஆகியவை உருவாகும் விதம் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்தும்,

அன்றிலிருந்து இன்றுவரை தரவுகளை நாம் சேமிக்க உபயோகப்படுத்தும் தரவு சேமிப்பு முறையையும், உலக நாடுகள் தரவுகளை சேமிப்பதற்காக செலவு செய்யும் புள்ளி விவரங்களையும்,

டிஎன்ஏவிற்குள் தரவுகளை சேமிக்க எந்தெந்த நாடுகளெல்லாம் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி செயல்பட்டு வருகிறது? என பல கேள்விகளுக்கானப் பதிலை இந்நூலின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்ஏவிற்குள் எவ்வளவு தரவுகளை சேமிக்கலாம்? எப்படி சேமிக்கலாம்? அதை எப்படி பாதுகாப்பது? நமக்கு தேவையான தரவுகளை எப்படி மீண்டும் பார்ப்பது? என்பதற்கான விடையையும் சிறப்பாக கூறியிருக்கிறார்.

டிஎன்ஏ தரவுகளைக் குறித்த அறிவியல் தகவல்களை ரத்தினச் சுருக்கமாக எல்லோருக்கும் புரியும் விதமாக படங்களுடனும் குறியுள்ளார். அறிவியலை ஆர்வமுடன் தேடிப் படிக்கும் விரும்பிகளுக்கு இந்நூல் ஒரு நல்ல அறிவு களஞ்சியமாக இருக்கும்.

புத்தகம்: BIOTER உயிருள்ள கணினி
ஆசிரியர்: ஈ.கோலை
வாலறிவன் பதிப்பகம்
பக்கங்கள்: 57

BIOTER உயிருள்ள கணினிbioter-uyirulla-kanini-book-reviewE. Colaiஈ.கோலை
Comments (0)
Add Comment