தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏன் இந்த சர்ச்சை?

பொதுவாக பலர் சேமித்து வைத்திருக்கும் பணத்தை சேப்டியாக வங்கியில் போட்டு வையுங்கள் என்பதுதான் அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திய விஷயம்.
 
இதையடுத்து கிராமப்புறங்களில் சொல்வது மாதிரி சிறுவாடு சேர்த்து வைத்திருக்கும் பல்வேறு தரப்பினரும் கூட வங்கியில் தங்களுக்கான வங்கிக் கணக்கைத் துவக்கி அதில் தங்களால் முடிந்ததைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
 
இம்மாதிரி எளிய மக்கள் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு எந்த மாதிரியான பாதுகாப்பு இருக்கிறது என்பதைப் பார்த்தால், சற்று அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது.
 
மிக அண்மையில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு பிரபலமான வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏறத்தாழ 3,800 பேர்களின் பெயர்கள் பற்றிய விவரங்கள் திட்டம் திட்டமிடப்பட்டு வெளியே கசிந்திருக்கின்றது.
 
அதாவது, அந்த வாடிக்கையாளர்களின் பெயர், அலைபேசி எண், வங்கியில் அவர் வைத்திருக்கும் இருப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியில் உள்ள யாருக்கோ கசிய விடப்பட்டு, சென்றடைந்திருக்கின்றன.
 
இது பற்றி ஆய்வு விசாரணை நடப்பதாகச் சொல்கிறார்கள்.
 
தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியிலிருந்து இப்படிப்பட்ட கசிவு உருவாகிறது என்றால், அங்கு பணியாற்றும் அதிகாரிகளும் ஊழியர்களும் உதவி பண்ணாமலா இப்படிப்பட்ட கசிவு நடந்திருக்கும்.
 
இதன்மூலம் அதே வங்கியில் நம்பிக்கையோடு தங்கள் சேமிப்புப் பணத்தை போட்டு வைத்திருந்த எத்தனை வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்து போயிருக்கிறது.
 
இதன் விளைவாக உருவாகும் முறைகேடுகளுக்கு அதே வங்கி பொறுப்பேற்குமா?
 
பணமில்லா பரிவர்த்தனை என்பதை வலியுறுத்தி வரும் மத்திய அரசுதான் பொறுப்பேற்குமா?
 
வாடிக்கையாளர்களை சேமிக்கச் சொல்கிறவர்கள் இந்த மாதிரியான அவலமான முறைகேடுகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
 
– அ.தமிழரசன்
Comments (0)
Add Comment