‘மக்கள்கள்’… : இனிமேல் இப்படித்தானா?

சில மாதங்களுக்கு முன்பு சென்னை நகர மேயரும், தமிழ் அறிந்தவருமான பிரியா, தான் பேசும்போது மக்களை “மக்கள்கள்“ என்று குறிப்பிட்டுப் பலரை ஆச்சரியப்படுத்தினார், தமிழ் அறிந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
 
ஆனால், நிலைமை அதோடு நிற்கவில்லை.
 
மக்கள்கள் என்று சொல்லிவிட்ட நிலையில், அதன் எதிரொலியாக அண்மையில் தமிழக முதல்வரான விஜய் தென் தமிழகத்திற்கு சென்றிருந்தபோது, இந்த பயணத்தை தொலைக்காட்சியில் நேரலையாக விவரித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியாளர், அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “மக்கள்கள் திரண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
 
“மக்கள்கள்“ என்ற சொல்லாடல் அலையெடுத்த மாதிரி பரவிக் கொண்டிருக்கிறது.
 
இதையடுத்து இனிமேல் இப்படியும் செய்திகள் வாசிக்கப்படலாம்.
 
அதாவது எல்லாவற்றிலும் ‘கள்’ சேர்க்கப்பட்டு இப்படியும் செய்திகள் வாசிக்கப்படலாம்.
 
‘வானங்கள் திரண்டு இருள ஆரம்பித்தன’
‘கடல்கள் கொந்தளிக்க ஆரம்பித்தன’
‘போலீஸ்கள் வந்து எச்சரித்ததும் மணல்களில் அமர்ந்திருந்த மக்கள்கள் சாலைகளை நோக்கி ஓட துவங்கினார்கள்’
‘மழைகள் வலுத்து பெய்ய ஆரம்பித்தன’
 

– ச.அரவிந்தன்

#மக்கள்கள் #தமிழ்மொழி #தமிழ்ச்சொற்கள் #தமிழ்இலக்கணம் #தமிழ்நகைச்சுவை #தமிழ்ஊடகம் #TamilLanguage #TamilGrammar #Makkalgal #TamilWords #TamilMedia #TamilHumour

 

Comments (0)
Add Comment