சென்ற திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சொன்ன ஒரு விமர்சனம் ‘ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர்’ என்பதுதான்.
இதன் அர்த்தம், ஸ்டாலின் தானாக இயங்காமல் மற்றவர்களால் ஆட்டுவிக்கப்படுகிறார் என்பதுதான்.
இத்தகைய சொல்லாடல் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து வெளியாகும்போது திமுக தரப்பிலிருந்து அதற்கு கடுமையான கண்டனம் எழுப்பப்பட்டிருக்கிறது.
திமுகவின் அடுத்த கட்டத் தலைவர்கள் பலர் இதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட எதிர்வினையை ஏற்கனவே தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சந்தித்திருக்கிற திமுக, இப்போது அதே தவறை மீண்டும் ஏன் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் பலருடைய கேள்வி.
தற்போதைய முதல்வரான விஜய் குறித்து குறிப்பிடும் போதெல்லாம் எதிர்கட்சித் தலைவரோ அல்லது திமுக தலைவரோ டம்மி முதல்வர் என்கின்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
அதாவது, முதல்வர் விஜய் சுயமாக ஆட்சி செய்யாமல் அவரை மற்றவர்கள் ஆட்டுவிக்கிறார்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.
சென்ற தேர்தலில் தன்னைப் பற்றி பொம்மை முதல்வர் என்று சொன்னதற்கு கண்டனம் தெரிவித்த திமுக, தற்போது அதேவிதமான சொல்லாடலை தற்போதைய முதல்வரான விஜய்க்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்துவதும்
இணைய இதழ்களில் அவரை பற்றி குறிப்பிடும்போதும் இதே சொல்லை பயன்படுத்துவதும் எந்த அளவில் நியாயம் என்பதுதான் கட்சியைச் சாராத பலருடைய இயல்பான கேள்வியாக இருக்கிறது.
இத்தகைய சொல்லாடல்களின் அர்த்தம் தவெக அரசுக்கு நன்கு தெரிகிறதோ இல்லையோ, திமுகவினருக்கு நன்கு தெரியும்.
தமிழை நேசிப்பதாகச் சொல்லும் அவர்கள் இம்மாதிரியான டம்மி முதல்வர் போன்ற சொல்லாடல்களை இனியாவது தவிருங்கள், அவ்வளவுதான்.