இயக்குநர் ஏ.பீம்சிங், சிவாஜி கணேசனை வைத்து ‘ப’ என்ற எழுத்தில் தொடங்கும் பல குடும்பக் காவியங்களை இயக்கியுள்ளார்.
1962-ல் ‘படித்தால் மட்டும் போதுமா’ திரைப்படம் அவற்றில் ஒன்று.
படிப்பை விட மனிதநேயமும் பாசமுமே முக்கியம் என்பதை அழகாக விளக்குகிய படம் இது.
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன
அதில், “பொன்னொன்று கண்டேன், பெண் அங்கு இல்லை…” – பி.பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல் மிகப்பிரபலம்.
குறிப்பு: ‘படித்தால் மட்டும் போதுமா’ படப்பிடிப்பின் இடைவேளையில் இயக்குநர் பீம்சிங், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பாலாஜி.