அழுகைக் காட்சியில் சிரிப்புக் காட்டிய என்.எஸ்.கே.!

இலங்கையில் ஒரு முறை நாடகம் நடத்தச் சென்றோம்.
 
அங்கு நடத்தப்பட்ட ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தில் நரகாசுரனாக கலைவாணர் என்.எஸ்.கே. நடிக்கிறார்.
 
அவர் மகன் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நரகாசுரன் வீழ்கிறான்.
 
அவர் வீழ்ந்ததும் “அப்பா, எனக்கு ஒரு வழியும் காட்டாமப் போறீங்களே” என்று அவர் மேல் நான் விழுந்து அழும் காட்சி.
 
நான் அப்படிச் சொல்லி அவர் மேல் விழுந்து அழும்போது என்.எஸ்.கே. சொல்கிறார்.
 
“மகனே கலங்காதே. அப்படியே தனுஷ்கோடி வழியா போ” என்கிறார்.
 
அது நான் அழ வேண்டியக் காட்சி. எனக்கோ சிரிப்பு வந்துவிட்டது.
 
நல்ல வேளை முகத்தை உடனே, அந்தப் பக்கம் முகம் திருப்பிக் கொண்டு, நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது, இந்தப் பக்கம் பார்ப்பவர்களுக்கு நான் அழுவது போல் தெரிந்தது.”
 
– எஸ்.வி. சகஸ்ரநாமம்
Comments (0)
Add Comment