நாகேஷை அணுஅணுவாக ரசித்துச் சிலாகித்த ரசிகன் நான்!

கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான அனுபவம்
“பொதுவாக என்னுடைய அலுவலகத்தில் யாருடைய போட்டோவையும் மாட்டி வைக்கும் பழக்கமில்லை.
 
குறிப்பாக, நான் யாருடனாவது சேர்ந்திருக்கும் படங்கள் இருப்பதில்லை, நாகேஷ்வுடன் நான் சேர்ந்து நிற்கும் ஒரே ஒரு புகைப்படத்தைத் தவிர!
 
அந்த போட்டோவில் நாகேஷ் என்கிற மகாக் கலைஞனை அணுஅணுவாக ரசித்து சிலாகித்து நிற்கும் ரசிகன் மனோபாவத்தோடு தான் நான் நிற்கிறேன்.
 
திரையுலகில் நாகேஷின் நடிப்பை ரசிப்பவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ‘ஃபேன் கிளப்’ ஒன்று ஆரம்பித்திருந்தால் அதற்கு அன்று முதல் இன்று வரை நான்தான் தலைவராக இருந்திருப்பேன். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
 
நகைச்சுவை என்பது நாகேஷின் ரத்தத்தில் கலந்தது.
 
ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில் மதிய உணவின் போது சிக்கன் லெக்பீஸை தட்டில் வேகமாகத் தட்டினேன்.
 
அதைப் பார்த்த நாகேஷ், ஏம்ப்பா அதான் ஏற்கெனவே கோழி செத்துடுச்சே… அதையேன் மறுபடியும் மறுபடியும் அடிச்சு சாகடிக்கிறே… என்று சொல்ல யூனிட்டே கொல்லென்று சிரித்தது.
 
அது மாதிரி இன்னொரு முறை பாழடைந்த வீடு ஒன்றில் ஷூட்டிங். மோட்டு வளையத்தில் ஒட்டடை அதிகமாக இருந்தது.
 
அதைப் பார்த்த ஒருவர், ‘அந்த ஒட்டடைய அடிங்கப்பா” என்று சொல்ல.. அங்கிருந்த நாகேஷ், “ஒட்டடைய அடிச்சா… பாவம் அது விழுந்துடும்” என்றார்.
 
“அடிச்சா கீழ விழத்தானே செய்யும் என்று அந்த நபர் பதிலுரைக்க… ஒட்டடைய சொல்லலை வீடே விழுந்துடும்…
 
ஏன்னா வீட்டுல ஒட்டடை ஒட்டிக்கிட்டு இல்லை. வீடே ஒட்டடை பலத்துலதான் விழாம இருக்கு…” என்று துளிகூட சிரிக்காமல் சொல்லி அந்த இடத்தையே கலகலப்பாக்கினார்.
Comments (0)
Add Comment