அயர்லாந்து நாட்டின் Cork (கார்க்) நகரத்துக்கு அருகில் இருக்கும் Blarney Castle (பிளார்னி கேஸில்) என்ற பழமையான கோட்டைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் செல்கிறார்கள்.
அந்தக் கோட்டையைப் பார்க்க மட்டும் அல்ல; அதன் உச்சியில் இருக்கும் ஒரு கல்லை முத்தமிடுவதற்காகவும்.
அந்தக் கல்லின் பெயர் Blarney Stone (பிளார்னி ஸ்டோன்). அதை முத்தமிட்டால் ஒருவருக்கு “Gift of the Gab” கிடைக்கும் என்பது பல நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் நம்பிக்கை.
அதாவது, அழகாகவும் புத்திசாலித்தனமாகவும், மற்றவர்களை ஈர்க்கும் விதமாகவும் பேசும் திறன் கிடைக்கும் என்பதுதான் இந்த நம்பிக்கையின் பொருள்.
ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. அந்தக் கல்லை முத்தமிடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
Blarney Castle (பிளார்னி கேஸில்)-ன் உச்சிப் பகுதிக்கு படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்ற பிறகு, பார்வையாளர்கள் பின்னால் சாய்ந்து, பாதுகாப்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, தலையைப் பின்னால் வளைத்து அந்தக் கல்லின் கீழ்ப்பகுதியை முத்தமிட வேண்டும்.
இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன. ஆனால், பழைய காலத்தில் இந்தச் சடங்கு இன்னும் ஆபத்தானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விசித்திரமான பழக்கம் எப்படி தொடங்கியது என்பதற்கு ஒரே பதில் இல்லை.
Blarney Castle இருக்கும் இடத்தில் முதலில் ஒரு மரக் கட்டிடம் இருந்ததாகவும், பின்னர் சுமார் 1210-ல் கல் கோட்டை ஒன்று கட்டப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
இன்றைக்கு நாம் பார்க்கும் முக்கியமான கோட்டை 1446-ல் Dermot MacCarthy (டெர்மட் மெக்கார்த்தி), King of Munster (கிங் ஆஃப் மான்ஸ்டர்) என்பவரால் கட்டப்பட்டது.
ஆனால், அந்தக் கோட்டையில் இருக்கும் கல்லின் கதை வரலாற்றை விட புராணங்களில்தான் அதிகமாக பயணிக்கிறது.
அவற்றில் ஒன்றின்படி, Cormac Laidir MacCarthy (கார்மக் லைடர் மெக்கார்த்தி) என்பவர் ஒரு சட்டப் பிரச்சினையில் சிக்கியிருந்தார்.
தன்னுடைய வழக்கை வெற்றிகரமாகப் பேசுவதற்கு உதவி தேடியபோது, ஐரிஷ் புராணங்களில் குறிப்பிடப்படும் Clíodhna (க்லியோத்னா) என்ற தேவதை அவருக்கு அறிவுரை கூறியதாகக் கதை சொல்கிறது.
அவர் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் முதலில் பார்க்கும் கல்லை முத்தமிட வேண்டும்.
அதன்படி அவர் செய்தபோது, நீதிமன்றத்தில் எதிர்பாராத அளவுக்கு அழகாகவும் திறமையாகவும் பேச முடிந்தது; வழக்கிலும் வெற்றி பெற்றார்.
அந்தக் கல்லுக்குத்தான் இந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதாக புராணக் கதை கூறுகிறது.
மற்றொரு கதை, ஒரு வயதான பெண்ணை நீரில் மூழ்குவதிலிருந்து MacCarthy காப்பாற்றியதாகவும், அவள் உண்மையில் ஒரு சூனியக்காரி என்றும் கூறப்படுகிறது.
நன்றிக்காக அவள் கோட்டையில் இருந்த ஒரு கல்லின் மந்திர சக்தியைப் பற்றி அவரிடம் கூறியதாக அந்தக் கதை சொல்கிறது.
பிரபலமான மற்றொரு கதை ஸ்காட்லாந்து நாட்டுடன் இந்தக் கல்லை இணைக்கிறது.
1314-ல் நடந்த Battle of Bannockburn (பேட்டில் ஆஃப் பானக்பர்ன்)-ல் Robert the Bruce (ராபர்ட் தி புரூஸ்) என்பவருக்கு MacCarthy குடும்பம் வீரர்களை அனுப்பி உதவியதாகவும், அதற்குப் பரிசாக Robert the Bruce, Stone of Scone (ஸ்டோன் ஆஃப் ஸ்கோன்)-ன் ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்கியதாகவும் அந்தக் கல்லே பின்னர் Blarney Stone ஆனதாக புராணங்கள் கூறுகிறது.
அறிவியல் பார்வையில், 2014-ல் University of Glasgow (யூனிவர்சிட்டி ஆஃப் கிளாஸ்கோ)-வைச் சேர்ந்த புவியியலாளர்கள், Blarney Stone-ல் இருந்து எடுக்கப்பட்ட பழைய நுண்ணிய மாதிரி ஒன்றை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், கல் calcite (கால்சைட்) நிறைந்த limestone (சுண்ணாம்புக்கல்) என்றும், அதில் fossil fragments (புதைபடிவத் துணுக்குகள்) இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
மேலும், அந்தக் கல் தெற்கு Ireland (அயர்லாந்து) பகுதியைச் சேர்ந்த சுமார் 330 மில்லியன் ஆண்டுகள் பழமையான Carboniferous limestone (கார்பனிஃபெரஸ் சுண்ணாம்புக் கல்) என்பதற்கு இந்த ஆய்வு வலுவான ஆதரவை வழங்கியது.
அப்படியானால், “Blarney” என்ற வார்த்தையே எப்படி உருவானது?
இதற்கும் Queen Elizabeth I தொடர்பான ஒரு பிரபலமான கதை இருக்கிறது. MacCarthy குடும்பம் English Crown (இங்கிலீஷ் கிரவுன்)-ன் கோரிக்கைகளை நேரடியாக ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து இனிமையாகப் பேசி, காரணங்களைக் கூறி, காலம் தாழ்த்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதிலிருந்து “blarney” என்ற சொல், ஒருவரை நேரடியாகப் புண்படுத்தாமல், இனிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் பேசிக்கொண்டே சமாளிப்பது அல்லது உண்மையைவிட அழகான பேச்சு என்ற பொருளைப் பெற்றதாக விளக்கப்படுகிறது.
ஆனால், Queen Elizabeth நேரடியாக “It’s all Blarney!” என்று சொன்னார் என்பது உறுதியான வரலாற்று உண்மை என்று கூற முடியாது; அதுவும் பிரபலமான வரலாற்றுக் கதை.
Blarney Stone-ன் உண்மையான வயதும், அதன் புராணங்களும் வெவ்வேறானவை.
புவியியல் ஆய்வு அந்தக் கல் சுமார் 330 மில்லியன் ஆண்டுகள் பழமையான limestone என்று சொல்கிறது.
அந்தக் கல்லுக்கு “பேசும் திறன்” இருக்கிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அது folklore (நாட்டுப்புற நம்பிக்கை) மட்டுமே.
ஒரு கல் மனிதனுக்கு பேசும் திறனைத் தருகிறதா என்பது இன்னும் ஒரு நம்பிக்கைதான்.
ஆனால், அந்தக் கல்லைப் பற்றிய கதைகள் மட்டும், பல நூற்றாண்டுகளாக மனிதர்களைப் பேச வைத்துக்கொண்டே இருக்கின்றது.
இந்த புராணக் கதைகள் எதுவும் உண்மை இல்லை என்றாலும் கேட்பதற்கு சுவாரஸ்யமானவையே.
– சங்கீதா