எல்லோரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வோம்!

எவரையும், எங்கும், எதற்கும்
குறை கூறவோ, வெறுக்கவோ கூடாது;

கோபத்தினாலோ, போட்டியினாலோ பிறருக்கு
வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்;

தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்;
குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்;

தாயன்பைப் போல எல்லையில்லா அன்பை
உலகில் தோன்றிய உயிரினத்தின் மீது காட்டுங்கள்.

– கௌதம புத்தர்.

 
Comments (0)
Add Comment