வெயில், மழையால் வெடிக்கும் எதிர்விளைவுகள்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பளீரென்ற வெண்மையுடன் வெயிலடித்து, சிறிது நேரத்திற்குள்ளேயே மழையும் பெய்கிறது.

தலைநகரான சென்னையில் வசிப்பவர்கள் ஒரே நாளில் இரண்டு தட்பவெட்ப நிலையின் மாற்றத்தை அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதனால் பலருக்கும் உடல்நிலையில் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ்கின்றன.

பலர் தொடர் காய்ச்சலினால் அவதிப்படுகிறார்கள். எங்கு பார்த்தாலும் இருமல் சத்தத்தைக் கேட்க முடிகிறது.

கூடவே வயிற்று வலி, செரிமானக் கோளாறு, முதுகுவலி என்று ஏகப்பட்ட அவஸ்தைகள் இருப்பதை மாநில சுகாதாரத் துறையே வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

இதோடு பரவிக்கொண்டிருக்கும் இன்னொரு பிரச்சனை இத்தகைய தாறுமாறான தட்பவெட்ப நிலையால் பலருக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டு, அரிப்பும் உருவாகி பலர் சங்கடப்பட வேண்டியிருக்கிறது.

இந்தியா மட்டுமல்ல பல நாடுகளிலும் பரவி இருக்கும் இத்தகைய தட்பவெட்ப நிலை மாற்றத்திற்கு எல்-நினோ என்று பெயரிடப்பட்டாலும், உலக நாடுகளில் இந்தப் பெயரைத் தெரியாதவர்கள்கூட இதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம் போல, மத்திய, மாநில அரசுகள் இங்கு மக்களிடம் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றன.

இயற்கைச் சூழலில் எழும் இத்தகைய ஆபத்தான தட்பவெட்ப நிலை மாற்றத்திகு இங்குள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் அதன் தாக்கத்தை உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எதார்த்தமாக இருக்கிறது.

உண்மையில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது நாம்தான்!

– யூகி

Comments (0)
Add Comment