தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பதவியேற்ற நாள் துவங்கி, அவரையும் லாட்டரி தொழிலையும் இணைத்துப் பேசுவது எதிர்கட்சித் தரப்பில் பரவலாகவே இருந்துவருகிறது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா கடுமையாகவே தன்னுடைய தரப்பிலான விளக்கத்தைக் கொடுத்தார்.
தான் எந்த விதவான தொழிலிலும் இல்லை என்று குறிப்பிட்டவர், எதிர்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து, “மார்ட்டினிடமிருந்து நன்கொடையாக திமுக தொல்லாயிரம் கோடி ரூபாயை வாங்கியதா, இல்லையா? சொல்லுங்கள்” என்று வெளிப்படையான ஒரு சவாலை முன் வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவருடைய கேள்வியைச் சட்டென்று சமாளித்து, “அதைக் கொடுத்தது உங்களுடைய மாமனார் தானே அவரிடமே கேளுங்கள்” என்று அவர் கூறினாலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்த குற்றச்சாட்டை நிரூபிப்பதாகவே மாற்றப்பட்டது.
இதையடுத்து பல்வேறு விதமான விமர்சனங்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகத் தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுப்பப்பட்டன.
அதில் ஒன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சொந்த மைத்துனர், அதாவது மனைவியின் சகோதரர், ஆதவ் அர்ஜுனாவைப் பற்றி பேசியது பல்வேறு ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது.
அந்தப் பேட்டியில் ஆதவ் அர்ஜுனாவின் சொந்த பெயர் செந்தில்குமார் என்பதையும் தன்னுடைய தங்கை திருமணம் முடிந்த பிறகு அவருக்கு குறிப்பிட்ட ஒரு தொகை அளிக்கப்பட்டு, அவர் செல்வாக்கு பெற்றதையும், அதன்பிறகு தற்போது லாட்டரி தொழிலுக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்திய ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் இன்னொரு தகவலையும் சொன்னார்.
அதன்பிறகு “ஏன் அப்போது இந்த அளவுக்கு பெரிய தொகையை திமுகவுக்கு அளித்தீர்கள்?“ என்று செய்தியாளர் கேட்டபோது, அதற்கு ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் சொன்ன பதில், “அப்போது திமுக ஆட்சிக்கு வரும் நேரத்தில் நாங்கள் அந்தப் பணத்தை அவரிடம் கொடுத்தோம்.
ஆட்சிக்கு வந்த பிறகு லாட்டரி விநியோகத்தை மறுபடியும் துவக்குவதற்கான ஒரு பேச்சை உதயநிதி ஸ்டான் கூறியதால்தான் நாங்கள் அந்தத் தொகையை அவரிடம் கொடுத்தோம்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த லாட்டரி விநியோகத்தைப் போக்குவதற்கான எந்த முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை” என்பதையும் நேரடியாக அவர் வெளிப்படுத்தியது, தற்போது வெவ்வேறு ஊடகங்களில் பகிரப்பட்டு பலரை சென்றடைந்து கொண்டிருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் எழுப்பிய கேள்வியின் விளைவாக தொடர்ந்து வெளியாகும் இத்தகைய சர்ச்சைகள் இதற்கு முன்பு நடந்த பல்வேறு விதமான உண்மையான நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் தற்போதைய எதார்த்தம்.
– ஏ. பாலாஜி