செய்தி:
காங்கிரஸ் சொல்வதைவிட மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கேட்கிறார்!
– அமைச்சர் நிர்மல்குமார்
கோவிந்த் கமெண்ட்:
சில சமயங்களில் சில வியப்பூட்டும் நிகழ்வுகளும் தமிழக அரசியலில் நடக்கின்றன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி மாறி தவெகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது காங்கிரஸ்.
அதையடுத்து நாடாளுமன்றத்தில்கூட காங்கிரசுடன் சேர்ந்து அமர மாட்டோம் தனி இருக்கைகள் தேவை என்று வலியுறுத்தும் அளவுக்குப் போன காங்கிரஸ், கர்நாடக முதல்வரான டி.கே.சிவக்குமாருடன் நல்ல தொடர்பில் திமுக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை வெளிப்படையாக வைத்திருக்கிறார் தவெக அமைச்சரான நிர்மல்குமார்.
இவரது குற்றச்சாட்டுதான் தற்போது, விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிசுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்ட நிலையிலிருக்கும் திமுக, கர்நாடகத்தில் மட்டும் காங்கிரஸ் முதல்வரான டி.கே.சிவக்குமாருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் சில ஆயத்த வேலைகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருப்பதற்கு திமுக தரப்பில் சரியான பதிலில்லை. மாநில காங்கிரஸ் தரப்பிலும் அதற்கான பதிலில்லை.
இருந்தாலும் அமைச்சரே ஏன் இப்படிச் சொல்கிறார் என்ற கேள்வி மட்டுமே தற்போது மிஞ்சியிருக்கிறது.