அமைச்சரவைக் கூட்டத்திலும் அதே எச்சரிக்கை!

செய்தி:   

ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக பதவி பறிப்பு!

அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை.

கோவிந்த் கமெண்ட்: 

தான் பதவியேற்ற போதிருந்தே தான் ஊழலுக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார் தமிழக முதல்வரான விஜய்.

ஊழல் செய்யமாட்டேன், ஊழல் செய்தவர்களையும் விடமாட்டேன் என்று சமீபத்தில் கரூர் கூட்டத்தில் கூட எச்சரித்திருந்தார் விஜய்.

அதையே தான் தற்போது அமைச்சரவைக் கூட்டத்திலும் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த எச்சரிக்கை அமைச்சர்களுக்கு மட்டுமானதல்ல. அமைச்சர்களை சுற்றியிருப்பவர்கள், உதவியாளர்கள்,  அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்குமே பொருந்தும்.

ஆனால், இந்த எச்சரிக்கையை ஓரிரு தடவையாவது செயல்படுத்திக் காட்டினால் தான் விஜய்யின் எச்சரிக்கைக்குக் கூடுதல் பலனிருக்கும்.

Comments (0)
Add Comment