இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி விளக்கம்

தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர். ‘குருதிப் புனல்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 

ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர்.

இவருடைய பெரும்பாலான நாவல்கள் உயர், நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை.

அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை.

அவரிடம் அ.ராமசாமி எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி:

ஒரு வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்து வந்துள்ள நீண்ட பயணத்தில் தமிழ் இலக்கிய உலகம் வீச்சுடன் செயல்பட்ட காலகட்டம் என எதனைக் கருதுகிறீர்கள்? ஏன்?

என்னைப் பொருத்த வரையில், தமிழ் இலக்கிய உலகம் இன்றும் முழு வீச்சுடன் செயல்பட்டு வருவதாகத்தான் நினைக்கின்றேன்.

ஒரு காலத்தில் சிறு பத்திரிகைகள் மட்டுந்தான் இதற்கு அளவுகோலாக இருந்தது.

இப்பொழுது, கணினியில் வரும் இணைய மடல்களையும், பத்திரிகைகளையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

Comments (0)
Add Comment