தேர்தலுக்குப் பிறகும் அதே பாணி பேச்சுத் தேவையா?

செய்தி:

லஞ்சம், ஊழல், பாகுபாடு இல்லாத ஆட்சியைத் தருவேன். நதிநீர் பங்கீடு உள்பட மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்!

– முதல்வர் விஜய்.

கோவிந்த் கமெண்ட்:

சென்னையில் தான் பதவியேற்ற கையோடு தொண்டர்களுக்கு முன்னால் பேசிய முதல்வர் விஜய், சற்று இடைவெளிவிட்டு தற்போது திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

அவருடைய சில உறுதிமொழிகளை அவரே நினைவுப்படுத்தியிருக்கிறார். நிதிப் பற்றாக்குறையையும் இடையே தெரிவித்திருக்கிறார்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையுமே வழக்கம்போல விமர்சித்தாலும் அதிமுக என்கின்ற பெயரை மட்டும் அவர் வழக்கம்போல உச்சரிக்கவில்லை.

அதேசமயம் முதல்வரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கு.

தேர்தல் பரப்புரை எல்லாம் முடிந்து நீங்களே முதல்வராக பதவியேற்ற பிறகும் அதே பரப்புரை காலத்திய பேச்சையே இன்னும் அதே பாணியில் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன?

Comments (0)
Add Comment