தேர்தலுக்கு முன்; தேர்தலுக்கு பின்!

செய்தி:

தேர்தலில் வெற்றி பெற்ற 21-வது நாளிலேயே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா!

– அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

கோவிந்த் கமெண்ட்:

தேர்தலுக்கு முன் அதிமுகவில் போட்டியிட்டவர்கள் தான் தேர்தலுக்குப் பின்பு எப்படியெல்லாம் மாறிப் போயிருக்கிறார்கள்.

சிலர் வெளியிலிருந்து எதிர்க்கிறார்கள். சிலர் தவெக நம்பிக்கைக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவளித்த நிலையில், சில ஏமாற்றங்களைச் சந்தித்து மறுபடியும் எடப்பாடி பக்கமே திரும்பியிருக்கிறார்.

இதில் 3 பேர் மட்டும் எம்.எல்.ஏ. பதவியையே ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தேவிட்டார்கள்.

அரசியலில்தான் எவ்வளவு மாயாஜாலங்கள் நடக்கின்றன.

Comments (0)
Add Comment