இந்தியாவின் தேயிலை சாம்ராஜ்யம்!

இந்தியாவின் டாப் 10 மாநிலங்களின் பட்டியல்:

மே 21: சர்வதேச தேயிலை தினத்தையொட்டி, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் டாப் 10 தேயிலை உற்பத்தி மாநிலங்கள் மற்றும் அவற்றின் வியப்பூட்டும் பங்களிப்புகள் இதோ!

தேயிலை உற்பத்தி செய்யும் முக்கியமான இந்திய மாநிலங்கள் மற்றும் தேயிலை தொழிலுக்கு அவை ஆற்றிய பங்களிப்புகள் என்ன என்று பார்ப்போம்.

1. அஸ்ஸாம்

இந்தியாவில் தேயிலை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் மாநிலம் அஸ்ஸாம். சராசரியாக இந்த மாநிலம் 347.809 ஹெக்டேர் நிலத்தைப் பயன்படுத்தி 654.63 மில்லியன் கிலோ தேயிலையை விளைவிக்கிறது.

இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் 50%க்கும் அதிகமான பங்களிப்பை அஸ்ஸாம் வழங்குகிறது.

2. மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம் 2வது இடத்தில், ஆண்டுதோறும் 329 மில்லியன் கிலோகிராம் தேயிலையைஉற்பத்தி செய்கிறது.

இந்த மாநிலத்தில் உள்ள மொத்த தேயிலைத் தோட்டங்கள் சுமார் 140.440 ஹெக்டேர் ஆகும்.

இவன் சுவைக்காகவும் பச்சை தேயிலைக்கும் புகழ்பெற்றது.

இது தேயிலைத் தொழில் பொருளாதரத்தில் முக்கிய முதுகெலும்பாக திகழ்வதோடு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.

3. தமிழ்நாடு – நீலகிரி

நாட்டின் மூன்றாவது பெரிய தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி ஆகும்.

இந்த மாநிலம் 165.88 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்கிறது. தேயிலை சாகுபடி செய்யப்படும் பரப்பளவு சுமார் 63.913 ஹெக்டேர் ஆகும்.

இதன் நறுமண சுவைக்காக அறியப்படும் நீலகிரி பகுதி முன்னணி தேயிலை விளையும் பகுதியாக உள்ளது.

4. கேரளா

இந்த மாநிலம் ஆண்டுக்கு சுமார் 59 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்கிறது.

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளது. தேயிலைத் தோட்டங்கள் சுமார் 35.10 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

மூணாறு, இடுக்கி, வயநாடு, கோட்டயம் ஆகியவை முக்கிய தேயிலை உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் ஆகும்.

கேரளாவில் தேயிலை நல்ல தரத்திற்கு இப்பகுதிகளின் சிறந்த காலநிலை மற்றும் உயரமான அமைப்பு காரணமாகும்.

5. கர்நாடகா

இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இது ஆண்டுக்கு சுமார் 5.12 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்கிறது.

இந்த மாநிலத்தில் சுமார் 2.093 ஹெக்டேர் பரப்பளவில் பெரும்பாலும் சித்மகளூர் மற்றும் குடகு, போன்ற பகுதிகளில் தேயிலை பயிரிடப்படுகிறது.

இந்த நிலவும் சாதகமான வெப்பநிலை மற்றும் மண் போன்ற அமைப்பாலும் தேயிலை உற்பத்தியின் நிலையான அதிகரிப்புக்கு வழி வகுக்கின்றன.

6. திரிபுரா

இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் திரிபுரா ஆறாவது இடத்தில் உள்ளது.

இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்கிறது.

ஏறக்குறைய 6,400 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுகிறது.

அகர்தலாவில் தனது சொந்த தேயிலை ஏல மையத்தை நிறுவியுள்ளது. இது தேயிலை சந்தையை சீரமைத்து லாபத்தை அதிகரிப்பதோடு, தேயிலையை மேலும் சிறந்ததாகவும் தகுதியானதாகவும் மாற்றுகிறது.

7. அருணாச்சலப் பிரதேசம்

ஒவ்வொரு ஆண்டும் அருணாச்சலப் பிரதேசம் சுமார் 214 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்கிறது.

இம்மாநிலத்தின் தேயிலை சாகுபடி பரப்பு சுமார் 2,200 ஹெக்டேர் ஆகும்.

இங்கு வெள்ளை, பச்சை, மற்றும் தங்க ஊசி தேயிலை போன்ற இயற்கை மற்றும் சிறப்பு ரகங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

பதப்படுத்தும் திறன்களை மேம்படுத்தவும், அம்மாநிலத்தில் சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு இந்த தேயிலை வாரியம் தீவிர உதவியை வழங்கி வருகிறது.

8. இமாச்சல பிரதேசம்

இந்தியாவை தேயிலை உற்பத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக 8 வது இடமார இமாச்சலப் பிரதேசம் வேகமாக உருவெடுத்து வருகிறது.

தற்போது அம்மாநிலத்தில் 2,310.71 ஹெக்டேர் நிலம் தேயிலை சாகுபடிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேயிலை தொழிலில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு பிராந்திய பொருளாதாரத்திற்கு சுமார் 20 கோடி ரூபாய் பங்களிப்பையும் வழங்குகிறது.

9. சிக்கிம்

தேயிலை சாகுபடிக்காக 175 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கி உள்ளது சிக்கிம். இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்பதாவது இடத்தில் இது உள்ளது.

இந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் 700 மெட்ரிக் டன் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

சிக்கிமின் ஒரே தேயிலை தோட்டமான தேமி தேயிலைத் தோட்டம் உள்ளது. இது உற்பத்திக்கு ஒரு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

பல ஏல நிறுவனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்கும் உயர்தர தேயிலையை உற்பத்தி செய்வதில் இது புகழ்பெற்றது.

சிக்கிமின் தேயிலைத் தொழில் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது.

10. நாகாலாந்து

750 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுவதால் நாகாலாந்து பத்தாவது இடத்தில் இந்தியாவின் முன்னணி தேயிலை உற்பத்தி மாநிலங்களின் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநிலம் சுமார் 1,000 மெட்ரிக் டன் தேயிலை உற்பத்தி செய்கிறது பல்வேறு வகையான தேவைகளை பயிரிடுவது நாகாலாந்தின் சூழல் மிகவும் உகந்ததாக உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரத்தை மேம்படுத்துகிறது. நாகாலாந்தில் உள்ள தேயிலை தோட்டங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, பொருளாதாரத்திற்கும் ஆதரவு அளிக்கின்றன.

இயற்கை விவசாய முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், நாகலாந்தின் தேயிலை தனித்துவமானது மற்றும் நுகர்வோரால் இத்தேயிலை மேலும் மேலும் விரும்பப்படுகிறது.

– எஸ். மாரிமுத்து

  • நன்றி : கல்கி
 
Comments (0)
Add Comment