ஆதார் அட்டைக்கும் மதுபாட்டிலுக்கும் விழுந்த முடிச்சு!

செய்தி:

ஆதாருடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை.

– மதுரையில் வீடுகளுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்த மதுப்பிரியர்கள்.

கோவிந்த் கமெண்ட்:

மூன்று முடிச்சு கேள்விப்பட்டிருப்போம்.

இப்போது, ஆதார் அட்டைக்கும் மதுபான விற்பனைக்குமான முடிச்சை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒருவிதத்தில் குடிக்க வருபவர்களை முன்கூட்டியே தெளிவுபடுத்தி ஆதார் அட்டையுடன் தான் வரவேண்டும் என்று வரவைத்திருப்பதன் மூலம், தற்போதைய அரசு சொன்னபடி 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆதார் அட்டை சகிதமாக வருவதற்கு சற்றே தயங்கலாம்.

இதுவரை எது எதற்கோ பயன்பட்டு வந்த ஆதார் அட்டை, இப்போது மதுபானக் கடைக்குள் நுழைவதற்கான நுழைவுச்சீட்டைப் போலவும் இருக்கிறது.

வாழ்க ஆதார் அட்டையுடன் கூடிய குடிமகன்கள்.

Comments (0)
Add Comment